பாகிஸ்தன் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 8ஆவது சீசன் தற்போது தொடங்கி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. இதில் இன்று நடைபெறும் 10ஆவது லீக் ஆட்டத்தில் ஷாஹீன் அஃப்ரிடி தலைமையிலான லாகூர் கலந்தர்ஸ், சர்ஃப்ராஸ் அஹ்மத் தலைமையிலான குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. 

Advertisement

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - குயிட்டா கிளாடியேட்டர்ஸ் vs லாகூர் கலந்தர்ஸ்
  • இடம் - தேசிய கிரிக்கெட் மைதானம், கராச்சி 
  • நேரம் - இரவு 7 மணி
Advertisement

போட்டி முன்னோட்டம்

சர்ஃப்ராஸ் அகமது தலைமையிலான குயிட்டா கிளாடியேட்டர்ஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், விளையாடிய மூன்று போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. அந்த அணியின் பேட்டிங்கில் மார்ட்டின் கப்தில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவருடன் சர்ஃப்ராஸ் அஹ்மத், இஃப்திகார் அஹ்மத் ஆகியோரும் ஃபார்முக்கு திரும்பியுள்ளது பெரும் பலமாக பார்க்கப்படுகிறது.

அவர்களுடன் ஜேசன் ராய், முகமது ஹபீஸ், ஓடியன் ஸ்மித், உமர் அக்மல் போன்றோரும் சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுள்ளனர். பந்துவீச்சில் நசீம் ஷா, முகமது ஹஸ்னைன், உமைத் ஆசிஃப் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருவது கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.

அதேசமயம் ஷாஹீன் அஃப்ரிடி தலைமையிலான லாகூர் கலந்தர்ஸ் அணி விளையாடிய இரண்டு போட்டிகளில் ஒரு வெற்றியைப் பெற்றுள்ளது. அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில் ஃபகர் ஸமான், ஷாய் ஹோப், டேவிட் வைஸ், சிக்கந்தர் ரஸா ஆகியோர் இருப்பது அணியின் பேட்டிங் பலத்தை கூட்டியுள்ளது.

Advertisement

பந்துவீச்சில் ஷாஹீன் அஃப்ரிடி, ஹாரிஸ் ராவுஃப், ரஷித் கான் என நட்சத்திர வீரர்களைக் கொண்டுள்ளனர். இரு அணிகளிலும் நட்சத்திர வீரர்கள் இருப்பதால் இப்போட்டியில் யார் வெற்றிபெறுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 14
  • குயிட்டா கிளாடியேட்டர்ஸ் - 07
  • லாகூர் கலந்தர்ஸ் - 07

உத்தேச லெவன்

Advertisement

குயிட்டா கிளாடியேட்டர்ஸ் - ஜேசன் ராய், மார்ட்டின் கப்தில், சர்ஃபராஸ் அகமது (கே), முகமது நவாஸ், இஃப்திகார் அகமது, ஒடியன் ஸ்மித், அப்துல் பங்கல்சாய், முகமது ஹபீஸ், நசீம் ஷா, முகமது ஹஸ்னைன், கைஸ் அகமது

லாகூர் கலந்தர்ஸ் - ஃபகார் ஸமான், மிர்சா தாஹிர் பெய்க், ஷாய் ஹோப், கம்ரான் குலாம், சிக்கந்தர் ராசா, ஹுசைன் தலாத், டேவிட் வைஸ், லியாம் டாசன், ஹாரிஸ் ராவுஃப், ஷஹீன் அஃப்ரிடி (கே), ஸமான் கான்.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்கள் - ஷாய் ஹோப்
  • பேட்டர்ஸ் - மார்ட்டின் கப்தில், இஃப்திகார் அகமது, மிர்சா தாஹிர் பெய்க், ஃபகார் ஸமான்
  • ஆல்-ரவுண்டர்கள் - முகமது நவாஸ், ஒடியன் ஸ்மித்
  • பந்துவீச்சாளர்கள் - ஹாரிஸ் ரவூப், ஷஹீன் அஃப்ரிடி, நசீம் ஷா, முகமது ஹஸ்னைன்.
Advertisement

கேப்டன்/துணைக்கேப்டன் தேர்வு - ஃபகார் ஸமான், மார்ட்டின் கப்தில், ஷஹீன் அஃப்ரிடி, முகமது ஹஸ்னைன்

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News