SL vs IND: காயம் காரணமாக ஒருநாள் அணியில் இருந்து பதிரானா, மதுஷங்கா விலகல்!

Updated: Thu, Aug 01 2024 13:27 IST
Image Source: Google

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகின்றன. நடைபெற்று முடிந்த இந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முடிவில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் அபாரமான வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன் இலங்கை அணியை அதன் சொந்த மண்ணிலேயே ஒயிட்வாஷ் செய்தும் அசத்தியுள்ளது.  

இதனையடுத்து இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நாளை (ஆகஸ்ட் 02) முதல் கொழும்புவில் தொடங்கவுள்ளது. இத்தொடருக்கான இரு அணியும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேற்கொண்டு இலங்கை அணி சொந்த மண்ணிலேயே டி20 தொடரில் ஒயிட்வாஷ் ஆகியுள்ளதால், ஒருநாள் தொடரில் கம்பேக் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், ஒருநாள் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னரே அந்த அணி மிகப்பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. நடைபெற்று முடிந்த டி20 தொடரில் இலங்கை அணியில் இடம்பிடித்து விளையாடிய நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்கள் மதீஷா பதிரானா மற்றும் தில்ஷன் மதுஷங்கா ஆகியோர் காயம் காரணமாக இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து விலகியுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. 

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியின் போது தில்ஷன் மதுஷங்காவும், மூன்றாவது போட்டியின் ஃபீல்டிங் போது மதீஷா பதிரானாவும் கயமடைந்தனர். பின்னர் அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையின் முடிவில் இரண்டாம் நிலை காயத்தை சந்தித்துள்ளதாகவும், அதிலிருந்து குணமடைய சில நாள்கள் ஆகும் என்பதாலும் இருவரும் ஒருநாள் தொடரில் இருந்து விலகியுள்ளனர். 

இதனையடுத்து அவர்களுக்கான மாற்று வீரர்களாக அறிமுக வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது ஷீராஸ் மற்றும் இஷான் மலிங்கா ஆகியோர் இலங்கை ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேற்கொண்டு குசால் ஜனித் பெரேரா, பிரமோத் மதுஷன் மற்றும ஜெஃப்ரி வண்டர்சே ஆகியோரும் ஒருநாள் அணிக்கான கூடுதல் வீரர்களாக அணியில் இடம்பிடித்துள்ளனர். இருப்பினும் அணியின் முக்கிய வீரர்கள் அடுத்தடுத்து விலகியது இலங்கை அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. 

இலங்கை ஒருநாள் அணி: சரித் அசலங்கா (கே), பதும் நிஷங்கா, அவிஷ்க ஃபெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, கமிந்து மெண்டிஸ், ஜனித் லியனாகே, நிஷான் மதுஷ்க, வனிந்து ஹஸரங்கா, துனித் வெல்லலாகே, சாமிக்க கருணாரத்ன, அகிலா தனஞ்செயா, மொகம்து ஷிராஸ், மஹீஸ் தீக்ஷனா, அசித்த ஃபெர்னாண்டோ, இஷான் மலிங்கா.

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

கூடுதல் வீரர்கள்: குசல் ஜனித் பெரேரா, பிரமோத் மதுஷன், ஜெஃப்ரி வன்டர்சே

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை