நியூசிலாந்து அணி சமீபத்தில் வங்கதேச அணிக்கெதிரான டி20 தொடரில் விளையாடியது. மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில் நியூசிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றி அசத்தியது. இதையடுத்து நியூசிலாந்து அணி அடுத்ததாக பாகிஸ்தான் அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. 

Advertisement

வருகின்ற ஜனவரி 12ஆம் தேதி தொடங்கும் இந்த தொடருக்கான நியூசிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நியூசிலாந்து அணியின் கேப்டனாக கேன் வில்லியம்சன் தொடர்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் அவர் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

கடந்த ஐபிஎல் 2023 சீசனில் அதாவது சரியான 9 மாதங்களுக்கு முன்பு கேன் வில்லியம்சனுக்கு முழங்காளில் காயம் ஏற்பட்டது. அதன்பிறகு நீண்ட காலம் அவர் கிரிக்கெட்டில் இருந்து விலகி ஓய்வில் இருந்தார். 2023 ஒருநாள் உலகக் கோப்பையில் நியூசிலாந்து அணியில் உள்ளேயும் வெளியேயும் விளையாடி கொண்டு இருந்தார். இதற்கு பிறகு, வங்கதேச சுற்றுப்பயணத்தில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இடம் பெற்றிருந்தார். 

இருப்பினும், வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இப்போது மீண்டும் அவர் நியூசிலாந்து அணிக்கு திரும்பியதன் மூலம் வலுவாக பார்க்கப்படுகிறது.  மாட் ஹென்றி, லோக்கி ஃபெர்குசன், டெவான் கான்வே ஆகியோரும் நியூசிலாந்து அணியில் இடம்பிடித்துள்ளனர். இதில் ஹென்றி மற்றும் பெர்குசன் ஆகியோர் தங்கள் காயங்களிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனர். 

அதேசமயம் தொடர்ச்சியான பணி சுமை காரணமாக பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடருக்கான நியூசிலாந்து அணியில் இருந்து ஆல் ரவுண்டர் ரச்சின் ரவீந்திராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. லோக்கி ஃபெர்குசன் முதல் இரண்டு போட்டிகளில் பங்கேற்காத நிலையில், 3ஆவது போட்டியில் இருந்து அணியில் இடம்பெற்றுள்ளார். 

நியூசிலாந்து அணி: கேன் வில்லியம்சன் (கேப்டன்), டெவான் கான்வே, ஃபின் ஆலன், டிம் செய்ஃபெர்ட், டேரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், ஆடம் மில்னே, ஜோஷ் கிளார்க்சன், மிட்செல் சான்ட்னர், மாட் ஹென்றி, இஷ் சோதி, டிம் சௌதி, லோக்கி ஃபெர்குசன், பென் சியர்ஸ்

Advertisement

நியூசிலாந்து - பாகிஸ்தான் டி20 அட்டவணை:

  • முதல் T20 - வெள்ளி, ஜனவரி 12, ஈடன் பார்க்
  • 2ஆவது T20 - ஞாயிறு, ஜனவரி 14, செடான் பார்க்
  • 3ஆவது டி20 - புதன், ஜனவரி 17, யுனிவர்சிட்டி ஓவல்
  • 4ஆவது T20 - வெள்ளி, ஜனவரி 19, ஹாக்லி ஓவல் 
  • 5ஆவது டி20 - ஞாயிறு, ஜனவரி 21, ஹாக்லி ஓவல்

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News