சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது ஒவ்வொரு மாதமும் சிறப்பாக விளையாடும் வீரர் மற்றும் வீராங்கனைகளைத் தேர்வுசெய்து விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. அதன்படி ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனை விருதுகளுக்கான பரிந்துரைப் பட்டியலை ஐசிசி சமீபத்தில் அறிவித்திருந்தது. 

Advertisement

அந்தவகையில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த வங்கதேசம் - ஜிம்பாப்வே டெஸ்ட் தொடர், நியூசிலாந்து - பாகிஸ்தான் தொடர்களில் சிறப்பாக செயல்பாட்ட வீரர்கள் இந்த பரிந்துரை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதான்படி வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜிம்பாப்வே அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிளெசிங் முஸரபானி ஐசிசி சிறந்த வீரர் விருதுகான பரிந்துரை பட்டியலில் இடம்பிடித்திருந்தனர்.

Advertisement

இத்தொடரில் அவர் இரண்டு போட்டிகளில் விளையாடி 9 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். அவரைத்தவிர்த்து இத்தொடரில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயால்பட்டு தொடர் நாயகன் விருதை வென்ற வங்கதேச ஆல் ரவுண்டர் மெஹிதி ஹசன் மிராஸும் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளார். இதில் அவர் இரண்டாவது டெஸ்டில் சதமடித்து அசத்தியதுடன் மொத்தமாக 15 விக்கெட்டுகளை வீழ்த்தியும் அசத்தினார்.

மேற்கொண்டு ஏப்ரல் தொடக்கத்தில் நடைபெற்று முடிந்த பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அபாரமான பந்துவீச்சின் மூலம் நியூசிலாந்துக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்த பென் சீயர்ஸும் இந்த பரிந்துரை பட்டியலில் இணைந்துள்ளார். அதிலும் குறிப்பாக இத்தொடரின் கடைசி இரண்டு போட்டிகளிலும் பென் சீயர்ஸ் அபாரமாக பந்துவீசி தொடர்ச்சியாக 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

இந்நிலையில் ஏப்ரல் மாத்திற்கான ஐசிசி சிறந்த வீரர் விருதை வங்கதேச அணியின் ஆல் ரவுண்டர் மெஹிதி ஹசன் மிராஸ் வென்றுள்ளார். இதன்மூலம் வங்கதேச அணி தரப்பில் இருந்து இந்த விருதை வாங்கும் மூன்றாவது வீரர் எனும் பெருமையை மெஹிதி ஹசன் மிராஸ் பெற்றுள்ளார். இதற்கு முன் வங்கதேச அணியில் இருந்து ஷாகிப் அல் ஹசன் மற்றும் முஷ்ஃபிக்கூர் ரஹிம் ஆகியோர் மட்டுமே இந்த விருதினை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Also Read: LIVE Cricket Score

Advertisement

அதேபோல் ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீராங்கனைக்கான பரிந்துரை பட்டியலில் ஸ்காட்லாந்து மகளிர் அணி கேப்டன் கேத்ரின் பிரைஸ், வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹீலி மேத்யூஸ் மற்றும் பாகிஸ்தான் கேப்டன் ஃபாத்திமா சனா ஆகியோர் இடம்பிடித்திருந்தனர். இதில் ஐசிசி மகளிர் உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்டதன் காரணமாக ஸ்காட்லாந்து அணியின் கேப்டன் கேத்ரின் பிரைஸ் ஏப்ரல் மாதத்தின் சிறந்த வீராங்கனை விருதை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News