வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இலங்கை அணி 3 டி20, 3 ஒருநாள் மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் டி20 தொடரை இலங்கை அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில், ஒருநாள் தொடரை வங்கதேச அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இதனையடுத்து நடைபெற்ற டெஸ்ட் தொடரை இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் கைப்பறி அசத்தியது.

Advertisement

இந்நிலையில் இத்தொடரின் மூலம் இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளனர். அதன்படி பேட்டிங் தரவரிசையில், அடுத்தடுத்து சதங்களை விளாசிய கமிந்து மெண்டிஸ் 18 இடங்கள் முன்னேற்றம் கண்டு 47ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அதேசமயம் குசால் மெண்டிஸ் 3 இடங்கள் முன்னேறி 52ஆவது இடத்தை பிடித்துள்ளார். 

Advertisement

இப்பட்டியலில் நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் முதலிடத்திலும், இங்கிலாந்தின் ஜோ ரூட் இரண்டாம் இடத்தையும், பாகிஸ்தானின் பாபர் அசாம் மூன்றாம் இடத்திலும் நீடிக்கின்றனர. அதேசமயம் இந்திய அணியைச் சேர்ந்த ரோஹித் சர்மா 6ஆம் இடத்திலும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 7ஆம் இடத்திலும், நட்சத்திர வீரர் விராட் கோலி தொடர்ந்து 9ஆம் இடத்திலும் நீடித்து வருகின்றனர். 

பந்துவீச்சாளர்கள் தரவரிசைப் பட்டியலில் ரவிச்சந்திரன் அஸ்வின் தொடர்ந்து முதலிடத்திலும், ஆஸ்திரேலியாவின் ஜோஷ் ஹசில்வுட் 2ஆம் இடத்திலும், இந்திய அணியின் ஜஸ்ப்ரித் பும்ரா மூன்றாம் இடத்திலும் நீடித்து வருகின்றனர். மேலும் 8ஆம் இடத்தில் இருந்த இலங்கை வேகப்பந்து வீச்சாளர் பிரபாத் ஜெயசூர்யா மூன்று இடங்கள் பின் தங்கி 11ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். அதேசமயம் ஆல் ரவுண்டர்கள் வரிசையில் எந்த மாற்றமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News