ஐபிஎல் 2024: மும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

Updated: Sat, Apr 13 2024 16:39 IST
ஐபிஎல் 2024: மும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்! (Image Source: )

17ஆவது சீசன் ஐபிஎல் தொடரானது நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்துவருகிறது. அந்த வகையில் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஐபிஎல் தொடரின் ’எல் கிளாசிகோ’ என்றழைக்கப்படும் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் நாளை நடைபெறும் லீக் போட்டியில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இதில் நடப்பு ஐபிஎல் சீசனில் இரு அணிகளிலும் புதிய கேப்டன்கள் நியமிக்கப்பட்டுள்ளதால், இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அந்தவகையில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் தொடரை வெற்றியுடன் தொடங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது விளையாடிய 5 போட்டிகளில் 3 வெற்றி, 2 தோல்விகள் என புள்ளிப்பட்டியலின் 3ஆம் இடத்தில் தொடர்கிறது. அதேசமயம் ஹர்திக் பாண்டியா தலைமையில் தொடரை தோல்வியுடன் தொடங்கி மும்பை இந்தியன்ஸ் அணியானது கடைசி இரண்டு போட்டிகளிலும் அடுத்தடுத்து வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. இதனால் இப்போட்டியில் மும்பை அணி தனது வெற்றி கணக்கை தொடருமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். 

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - மும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ்
  • இடம் - வான்கடே கிரிக்கெட் மைதானம், மும்பை
  • நேரம் - இரவு 7.30 மணி

பிட்ச் ரிப்போர்ட்

இந்த போட்டி மும்பை இந்தியன்ஸ் அணியின் சொந்த மைதானமான வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது. இங்கு முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 172 ரன்களாக உள்ளது. மேலும் இங்கு இரண்டாம் பாதியில் பனியின் தாக்கம் இருக்கும். இதனால் இங்கு டாஸ் வெல்லும் அணி முதலில் பந்து வீசுவது அணியின் வெற்றிக்கு வழிவகுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

நேரலை

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல் தொடரின் இந்த சீசனின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் கண்டு ரசிக்கலாம். அதேசமயம் இத்தொடரின் ஓடிடி உரிமத்தை வியாகம் 18 நிறுவனம் பெற்றுள்ளதால், ரசிகர்கள் இத்தொடரை ஜியோ சினிமா ஓடிடி தளத்திலும் இலவசமாக நேரலையில் கண்டு மகிழலாம். 

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 36
  • மும்பை இந்தியன்ஸ் - 20
  • சென்னை சூப்பர் கிங்ஸ் - 16

உத்தேச லெவன்

மும்பை இந்தியன்ஸ்: இஷான் கிஷன், ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா (கே), டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்ஃபர்ட், முகமது நபி, ஸ்ரேயாஸ் கோபால், ஜஸ்பிரித் பும்ரா, ஜெரால்ட் கோட்ஸி, ஆகாஷ் மத்வால்

சென்னை சூப்பர் கிங்ஸ்: ரச்சின் ரவீந்திரா, ருதுராஜ் கெய்க்வாட் (கே), அஜிங்க்யா ரஹானே, ஷிவம் துபே, டேரில் மிட்செல், ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி, ஷர்துல் தாக்கூர்/தீபக் சஹார், துஷார் தேஷ்பாண்டே, முஸ்தஃபிசூர் ரஹ்மான், மகேஷ் தீக்ஷனா/ மதீஷா பதிரனா.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்கள்: இஷான் கிஷன்
  • பேட்டர்ஸ்: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஷிவம் துபே, ரச்சின் ரவீந்திரா (துணை கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட்
  • ஆல்ரவுண்டர்கள்: ரவீந்திர ஜடேஜா, டேரில் மிட்செல், ஹர்திக் பாண்டியா, ரொமாரியோ ஷெப்பர்ட்
  • பந்துவீச்சாளர்கள்: ஜஸ்பிரித் பும்ரா, முஸ்தாஃபிசூர் ரஹ்மான்

MI vs CSK IPL 2024 Dream11 Prediction, Today Match MI vs CSK, MI vs CSK Dream11 Team, Fantasy Cricket Tips, MI vs CSK Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Mumbai Indians vs Chennai Super Kings

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை