17ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இத்தொடரில் எந்த நான்கு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இத்தொடரில் நாளை நடைபெறும் 51ஆவது லீக் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இதில் மும்பை அணி விளையாடிய 10 போட்டிகளில் 3 வெற்றிகளை மட்டுமே பெற்றும் ஏறத்தாழ பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துள்ளது. அதேசமயம் கொல்கத்தா அணி விளையாடியுள்ள 9 போட்டிகளில் 6 வெற்றிகளை பதிவுசெய்துள்ளதுடன் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பையும் நெருங்கி வருகின்றன. இதனால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளது. 

Advertisement

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - மும்பை இந்தியன்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
  • இடம் - வான்கடே கிரிக்கெட் மைதானம், மும்பை
  • நேரம் - இரவு 7.30 மணி
Advertisement

பிட்ச் ரிப்போர்ட்

இந்த போட்டி மும்பை இந்தியன்ஸ் அணியின் சொந்த மைதானமான வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது. இங்கு முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 172 ரன்களாக உள்ளது. மேலும் இங்கு இரண்டாம் பாதியில் பனியின் தாக்கம் இருக்கும். இதனால் இங்கு டாஸ் வெல்லும் அணி முதலில் பந்து வீசுவது அணியின் வெற்றிக்கு வழிவகுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 32
  • மும்பை இந்தியன்ஸ் - 23
  • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 09

நேரலை

Advertisement

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல் தொடரின் இந்த சீசனின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் கண்டு ரசிக்கலாம். அதேசமயம் இத்தொடரின் ஓடிடி உரிமத்தை வியாகம் 18 நிறுவனம் பெற்றுள்ளதால், ரசிகர்கள் இத்தொடரை ஜியோ சினிமா ஓடிடி தளத்திலும் இலவசமாக நேரலையில் கண்டு மகிழலாம். 

உத்தேச லெவன்

மும்பை இந்தியன்ஸ்: இஷான் கிஷான், ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா (கேப்டன்), நேஹல் வதேரா, டிம் டேவிட், ஜெரால்ட் கோட்ஸி, பியூஷ் சாவ்லா, ஜஸ்பிரித் பும்ரா, நுவான் துஷாரா.

Advertisement

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: பில் சால்ட், சுனில் நரைன், ஆங்கிரிஷ் ரகுவன்ஷி, ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), வெங்கடேஷ் ஐயர், ரிங்கு சிங், ஆண்ட்ரே ரஸல், மிட்செல் ஸ்டார்க், வைபவ் அரோரா, அனுகுல் ராய், வருண் சக்ரவர்த்தி.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர் - பில் சால்ட், இஷான் கிஷன்
  • பேட்ஸ்மேன்கள் - ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர், திலக் வர்மா
  • ஆல்ரவுண்டர் - சுனில் நரைன் (கேப்டன்), ஆண்ட்ரே ரசல், ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்)
  • பந்துவீச்சாளர்கள் - ஜஸ்பிரித் பும்ரா, வைபவ் அரோரா.

MI vs KKR Dream11 Prediction, Today Match Prediction, Today Match MI vs KKR, MI vs KKR Dream11 Team, Fantasy Cricket Tips, MI vs KKR Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Mumbai Indians vs Kolkata Knight Riders

Advertisement

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News