Mumbai Indians vs Royal Challengers Bengaluru Dream11 Prediction, IPL 2025: ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து வருகிறது. அதிலும் ஒவ்வொரு ஆட்டத்திலும் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வருவதன் காரணமாக ரசிகர்களின் எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. 

Advertisement

இந்நிலையில் இத்தொடரில் நாளை நடைபெறும் 20ஆவது லீக் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் மற்றும் ரஜத் படிதர் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இரு அணிகளும் தோல்விகு பிற்கு இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளதன் காரணமாக, இதில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.

Advertisement

MI vs RCB: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள்- மும்பை இந்தியன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
  • இடம் -  வான்கடே கிரிக்கெட் மைதானம், லக்னோ
  • நேரம் - ஏப்ரல் 07, இரவு 7.30 மணி (இந்திய நேரப்படி)

MI vs RCB Pitch Report

ஐபிஎல் 2025 தொடரின் 20ஆவது போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது. இங்கு இதுவரை 13 சர்வதேச டி20 போட்டிகள் நடந்துள்ள நிலையில்,  அதில் 7 போட்டிகளில் ரன்களை சேஸ் செய்த அணி வெற்றி பெற்றுள்ளது, 6 போட்டிகளில் பேட்டிங் செய்த அணிகள் வெற்றிபெற்றுள்ளன. மேற்கொண்டு இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸின் சராசரி178 ரன்களாகவும் உள்ளது. அதேசமயம் இந்த மைதானத்தில் குவிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக 247 ரன்கள் உள்ளது. மேற்கொண்டு பேட்டர்கள் தங்கள் விருப்பம் போல் விளையாட முடியும் என்பதால் நிச்சயம் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

MI vs RCB: Where to Watch?

Advertisement

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி இந்தியாவில் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் ஜியோ ஹாட்ஸ்டாரிலும் நேரலையில் கணலாம்.

MI vs RCB Head To Head Record

  • மோதிய போட்டிகள் - 33
  • மும்பை இந்தியன்ஸ் - 19
  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - 14

MI vs RCB Dream11 Team

  • விக்கெட் கீப்பர்- பில் சால்ட், ஜிதேஷ் சர்மா, ரியான் ரிக்கல்டன்
  • பேட்ஸ்மேன்கள் - விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ரஜத் படிதார்
  • ஆல்-ரவுண்டர்கள் - லியாம் லிவிங்ஸ்டோன், ஹார்டிக் பாண்டியா (துணை கேப்டன்), நமன் தீர்
  • பந்து வீச்சாளர்கள் - ஜோஷ் ஹேசில்வுட், அஷவானி குமார்.
Advertisement

Mumbai Indians vs Royal Challengers Bengaluru Probable Playing XI

Mumbai Indians Probable Playing XI: வில் ஜாக்ஸ், ரியான் ரிக்கல்டன் (விக்கெட் கீப்பர்), நமன் தீர், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா (கேப்டன்), மிட்செல் சான்ட்னர், ராஜ் பாவா, டிரென்ட் போல்ட், அஷ்வினி குமார், தீபக் சாஹர்.

இம்பேக்ட் வீரர் - விக்னேஷ் புதூர்.

Advertisement

Royal Challengers Bengaluru Probable Playing XI: பில் சால்ட், விராட் கோலி, தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), க்ருனால் பாண்டியா, டிம் டேவிட், புவனேஷ்வர் குமார், ஜோஷ் ஹேசில்வுட், யாஷ் தயாள்.

இம்பேக்ட் வீரர் - ராசிக் சலாம்.

MI vs RCB Dream11 Prediction, MI vs RCB, MI vs RCB Dream11 Team, Fantasy Cricket Tips, IPL 2025, MI vs RCB Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Mumbai Indians vs Royal Challengers Bengaluru

Advertisement

Disclaimer: இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News