பாகிஸ்தான் டி20 தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு; கேப்டனாக பிரேஸ்வெல் நியமனம்!

Updated: Tue, Mar 11 2025 08:46 IST
Image Source: Google

நடைபெற்று முடிந்த ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியானது அடுத்தடுத்த தோல்விகள் காரணமாக லீக் சுற்றுடன் வெளியேறியது. அதேசமயம் நியூசிலாந்து அணி இறுதிப்போட்டி வரை முன்னேறிய நிலையில், இந்தியாவிடம் தோல்வியைத் தழுவி கோப்பை வெல்லும் வாய்ப்பை இழந்தது. 

இதனையடுத்து பாகிஸ்தான் அணி அடுத்ததாக நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் மூன்று போட்டிகள் ஒருநாள் தொடரிலும் விளையாடவுள்ளது.  இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த தொடர் எதிர்வரும் மார்ச் 16ஆம் தேதி முதல் தொடங்வுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்துள்ளது.

இதில் மிக முக்கியமான பாகிஸ்தான் டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து முகமது ரிஸவான் நீக்கப்பட்டு சல்மான் அலி ஆக அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதேசமயம் ஒருநாள் அணியின் கேப்டனாக ரிஸ்வான் தொடர்கிறார். இதுதவிர்த்து பாகிஸ்தான் டி20 அணியில் இருந்து நட்சத்திர வீரர்கள் பாபர் ஆசாம், முகமது ரிஸ்வான் மற்றும் நசீம் ஷா உள்ளிட்டோரும் நீக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்கும் நியூசிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. இதில் அணியில் வழக்கமான வீரர்கள் மிட்செல் சான்ட்னர், டெவான் கான்வே, கிளென் பிலீப்ஸ், லோக்கி ஃபெர்குசன், ரச்சின் ரவீந்திரா உள்ளிட்டோர் ஐபிஎல் தொடரில் பங்கேற்கவுள்ள காரணமாக இந்த டி20 தொடரில் இருந்து விலகியுள்ளனர். 

இதன் காரணமாக நியூசிலாந்து டி20 அணியின் கேப்டனாக மைக்கேல் பிரேஸ்வெல் நியமிக்கப்பட்டுள்ளார். அதேசமயம் அணியின் அனுபவ வீரரான கேன் வில்லியம்சனும் காயம் காரணமாக இத்தொடரில் இடம்பிடிக்கவில்லை. இதன் காரணமாக இஷ் சோதி, ஜேம்ஸ் நீஷம், டிம் செய்ஃபெர்ட், பென் சீயர்ஸ் மற்று, ஃபின் ஆலன் ஆகியோருக்கு இந்த டி20 தொடருக்கான நியூசிலாந்து அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

நியூசிலாந்து டி20 அணி: மைக்கேல் பிரேஸ்வெல் (கேப்டன்), ஃபின் ஆலன், மார்க் சாப்மேன், ஜேக்கப் டஃபி, ஜாக் ஃபோல்க்ஸ், மிட்செல் ஹெய், மேட் ஹென்றி, கைல் ஜேமிசன், டேரில் மிட்செல், ஜிம்மி நீஷாம், வில்லியம் ஓ'ரூர்க், டிம் ராபின்சன், பென் சியர்ஸ், டிம் செய்ஃபெர்ட், இஷ் சோதி

Also Read: Funding To Save Test Cricket

பாகிஸ்தான் டி20 அணி: ஹசன் நவாஸ், உமைர் யூசுப், முகமது ஹாரிஸ், அப்துல் சமத், சல்மான் அலி ஆகா (கேப்டன்), இர்ஃபான் நியாசி, குஷ்தில் ஷா, ஷதாப் கான், அப்பாஸ் அஃப்ரிடி, ஜஹந்தத் கான், முகமது அலி, ஷஹீன் ஷா அஃப்ரிடி, ஹாரிஸ் ரவூப், சுஃபியான் முகீம், அப்ரார் அகமது, உஸ்மான் கான்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை