ஐசிசியின் ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை இந்த முறை அக்டோபர் நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடைபெறவுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற முடிந்த 16ஆவது ஐபிஎல் சீசன் தொடரின் ஆரம்பத்தில் குஜராத் அணியில் 2 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டு முதல் ஆட்டத்தில் விளையாடிய நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் ஃபீல்டிங் செய்யும் பொழுது கால் மூட்டில் காயமடைந்து வெளியேறினார்.

Advertisement

பிறகு அந்தக் காயம் மோசமாக இருக்கவே தொடர்ந்து ஐபிஎல் தொடரில் விளையாடாமல் நாடு திரும்பினார். அவருடைய காயத்திற்கு ஆறு மாதங்கள் ஓய்வு தேவைப்படுகின்ற நிலையில், அவர் இந்த ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் விளையாடுவாரா? என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளிவரவில்லை.

Advertisement

இந்த நிலையில் நியூசிலாந்து அணிக்கு மேலும் ஒரு பின்னடைவாக அந்த அணியின் சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் மைக்கேல் பிரேஸ்வெல் உள்நாட்டு கிரிக்கெட்டின் போது குதிகாலில் காயமடைந்து, தற்பொழுது உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறி இருக்கிறார் என்ற தகவல் வந்திருக்கிறது.

இதுகுறித்து நியூசிலாந்து அணியின் பயிற்சியாளர் கேரி ஸ்டெட் கூறும்பொழுது, “வீரர்களுக்கு காயம் எனும் பொழுது முதலில் நாம் யோசிப்பது வீரர்களைப் பற்றிதான். அவர் எங்களுக்கு உலகக்கோப்பை தொடரில் ஒரு முக்கியமான வீரராக உருவாக்கிக் கொண்டு வந்தார். அவர் தற்பொழுது உலகக்கோப்பை தொடரை இழக்கிறார். அவரது அறிமுகத்தில் இருந்து 15 மாதங்கள் தொடர்ந்து அணிக்காக மிகச் சிறப்பாக செயல்பட்டு இருந்தார்.

கிரிக்கெட்டில் மூன்று விதமான செயல்பாட்டிலும் அவருக்கு விதிவிலக்கான திறமைகள் இருந்ததை நாங்கள் பார்த்தோம். தற்போதைய காயத்தால் அவர் மிகவும் இயல்பாகவே ஏமாற்றமடைந்திருக்கிறார். ஆனால் காயங்கள் விளையாட்டின் ஒருபகுதி என்பதை அவர் உணர்ந்தவர். அவர் தனது கவனத்தை இப்பொழுது தனது மறு வாழ்வில் திருப்புவார்” என்று தெரிவித்துள்ளார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News