MI Cape Town vs Paarl Royals Dream11 Prediction: தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 6ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் மற்றும் பார்ல் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.. 

Advertisement

இத்தொடரில் கேப்டவுன் அணி விளையாடிய இரண்டு போட்டிகளில் ஒரு வெற்றி ஒரு தோல்வி என 5 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலின் இரண்டாம் இடத்தில் உள்ளது. அதேசமயம் பார்ல் ராயல்ஸ் அணி விளையாடிய முதல் போட்டியிலேயே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. மேற்கொண்டு இரு அணியிலும் நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளதால் இப்போட்டி மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளது. 

Advertisement

MICT vs PR, SA20 2025: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் vs பார்ல் ராயல்ஸ்
  • இடம் -  நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானம், கேப்டவுன்
  • நேரம் - ஜனவரி 13, இரவு 9.00 மணி (இந்திய நேரப்படி)

MICT vs PR Pitch Report

இப்போட்டி கேப் டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இங்கே டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீசுவதையே விரும்புகிறது. மேலும் இங்கு டி20 கிரிக்கெட்டில் முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 151 ரன்களாக உள்ள நிலையில், இங்கு அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக 213 ரன்கள் குவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர்த்து நடப்பு எஸ்ஏ20 தொடரில் இங்கு நடைபெறும் முதல் லீக் ஆட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

MICT vs PR: Where to Watch?

Advertisement

எஸ்ஏ20 லீக் தொடரின் அனைத்து போட்டிகளில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி இந்தியாவில் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் டிஸ்னி+ஹாட் ஸ்டாரிலும் நேரலையில் கணலாம்.

MICT vs PR Head To Head Record

  • மோதிய போட்டிகள் - 04
  • எம்ஐ கேப் டவுன் - 03
  • பார்ல் ராயல்ஸ் - 01

MICT vs PR Dream11 Prediction

  • விக்கெட் கீப்பர் – லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ்
  • பேட்ஸ்மேன்கள் - ரீசா ஹென்ட்ரிக்ஸ், டேவிட் மில்லர், ஜோ ரூட் (துணை கேப்டன்), டெவால்ட் பிரீவிஸ்
  • ஆல்ரவுண்டர்கள் - ஜார்ஜ் லிண்டே, டெலானோ போட்ஜீட்டர் (கேப்டன்)
  • பந்து வீச்சாளர்கள் - டிரென்ட் போல்ட், காகிசோ ரபாடா, முஜீப் உர் ரஹ்மான், குவேனா மபாகா.
Advertisement

MI Cape Town vs Paarl Royals Probable Playing XI

MI Cape Town Probable Playing XI: ரஸ்ஸி வான் டெர் டஸ்ஸன், ரீசா ஹென்ட்ரிக்ஸ், கானர் எஸ்டெர்ஹுய்சென், காலின் இங்க்ராம், டெவால்ட் பிரீவிஸ், ஜார்ஜ் லிண்டே, அஸ்மதுல்லா உமர்சாய், ரஷீத் கான் (கேப்டன்), டெலானோ போட்ஜீட்டர், காகிசோ ரபாடா, டிரென்ட் போல்ட்

Paarl Royals Probable Playing XI : ஜோ ரூட், லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ், சாம் ஹெய்ன், மிட்செல் வான் பியூரன், டேவிட் மில்லர் (கேப்டன்), தினேஷ் கார்த்திக், தயான் காலிம், பிஜோர்ன் ஃபோர்டுயின், முஜீப் உர் ரஹ்மான், குவேனா மபாகா, லுங்கி இங்கிடி.

Advertisement

MICT vs PR Dream11 Prediction, MICT vs PR Dream11 Team, Today Match MICT vs PR, SA20 2025, Big Bash League 2025, Fantasy Cricket Tips, MICT vs PR Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match MI Cape Town vs Paarl Royals

Disclaimer: *இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News