Paarl Royals vs MI Cape Town Dream11 Prediction: தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 6 அணிகள் பங்கேற்றிருந்த இத்தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு எம்ஐ கேப்டவுன், பார்ல் ராயல்ஸ், ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகள் முன்னேறிவுள்ளன.

Advertisement

இந்நிலையில் இத்தொடரின் முதல் குவாலிஃபையர் ஆட்டத்தில் ரஷித் கான் தலைமையிலான எம்ஐ கேப்டவுன் அணியும், டேவிட் மில்லர் தலைமையிலான பார்ல் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது கெபெர்ஹா உள்ள செயின்ட் ஜார்ஜ் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு எஸ்ஏ20 லீக் தொடரின் லீக் சுற்றின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடங்களைப் பிடித்துள்ள அணிகள் நேருக்கு நேர் மோதவுள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

PR vs MICT, SA20 2025: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - எம்ஐ கேப்டவுன் vs பார்ல் ராயல்ஸ்
  • இடம் -  செயின்ட் ஜார்ஜ் பார்க் கிரிக்கெட் மைதானம், கெபெர்ஹா
  • நேரம் - பிப்ரவரி 02,  இரவு 9.00 மணி (இந்திய நேரப்படி)

PR vs MICT Pitch Report

இப்போட்டி கெபெர்ஹா உள்ள செயின்ட் ஜார்ஜ் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இங்கே பேட்டர் மற்றும் பந்துவீச்சாளர்களுக்கு சமமான ஒத்துழைப்பு கிடைத்துள்ளது. மேற்கொண்டு இங்கு இதுவரை 10 போட்டிகள் நடைபெற்றுள்ல நிலையில், அதில் 4 முறை முதலில் பேட்டிங் செய்த அணிகளும், 6 முறை இரண்டாவது பேட்டிங் செய்த அணிகளும் வெற்றிபெற்றுள்ள. மேலும் இங்கு டி20 கிரிக்கெட்டில் முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 136 ரன்களாக உள்ள நிலையில், இங்கு அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக 180 ரன்கள் குவிக்கப்பட்டுள்ளது.

PR vs MICT Head To Head Record

  • மொத்தம் - 06
  • எம்ஐ கேப் டவுன் - 04
  • பார்ல் ராயல்ஸ் - 02

PR vs MICT: Where to Watch?

எஸ்ஏ20 லீக் தொடரின் அனைத்து போட்டிகளில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி இந்தியாவில் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் டிஸ்னி+ஹாட் ஸ்டாரிலும் நேரலையில் கணலாம்.

PR vs MICT Dream11 Prediction

  • விக்கெட் கீப்பர் - ரியான் ரிக்கல்டன், ரூபின் ஹர்மன்
  • பேட்ஸ்மேன்கள் - ரீசா ஹென்ட்ரிக்ஸ்(துணைக்கேப்டன்), ரஸ்ஸி வான்டெர் டுசன், லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ்
  • ஆல்ரவுண்டர்கள் - ஜார்ஜ் லிண்டே, மிட்செல் ஓவன் (கேப்டன்)
  • பந்து வீச்சாளர்கள் - டிரென்ட் போல்ட், பிஜோர்ன் ஃபோர்டுயின், ரஷீத் கான், முஜீர் உர் ரஹ்மான்.

Paarl Royals vs MI Cape Town Probable Playing XI

Paarl Royals Probable Playing XI : மிட்செல் ஓவன், லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ், ரூபின் ஹெர்மன், டேவிட் மில்லர் (கே), மிட்செல் வான் பியூரன், தினேஷ் கார்த்திக், தயான் கலிம், பிஜோர்ன் ஃபோர்டுயின், முஜீப் உர் ரஹ்மான், ஈஷான் மலிங்கா, குவேனா மபாகா.

MI Cape Town Probable Playing XI:  ரஸ்ஸி வான்டெர் டுஸன், ரியான் ரிக்கல்டன், ரீசா ஹென்ட்ரிக்ஸ், செதிகுல்லா அடல், டெவால்ட் ப்ரீவிஸ், ஜார்ஜ் லிண்டே, டெலானோ போட்ஜீட்டர், ரஷீத் கான் (கே), கார்பின் போஷ், டிரென்ட் போல்ட், காகிசோ ரபாடா.

PR vs MICT Dream11 Prediction, PR vs MICT Dream11 Team, Today Match PR vs MICT, SA20 2025, Fantasy Cricket Tips, PR vs MICT Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match Paarl Royals vs MI Cape Town

Disclaimer: *இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News