ஐசிசி உலகக்கோப்பை லீக் 2 கிரிக்கெட் தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 33ஆவது லீக் போட்டியில் அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு அமீரக அணிகள் பலப்பரீட்சை நடத்ததின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரக அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

Advertisement

இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த அமெரிக்க அணியில் ஆண்ட்ரிச் கௌஸ், கேப்டன் மொனாங்க் படேல் ஆகியோர் சொற்ப ரன்களுக்கும், சமித் படேல் 48 ரன்களுக்கும் விக்கெட்டை இழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த சாய்தேஜா முக்காமல்லா - மிலிந்த் குமார் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் தங்கள் அரைசதங்களைப் பதிவுசெய்தனர். 

Advertisement

இதன்மூலம் அமெரிக்க அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 339 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக மிலிந்த் குமார் 155 ரன்களையும், சாய்தேஜா முக்காமல்லா 107 ரன்களையும் சேர்த்தனர். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ஐக்கிய அரபு அமீரக அணியில் ஆசிஃப் கான் 51 ரன்களையும், ராகுல் சோப்ரா 52 ரன்களையும், பசில் ஹமீத் 50 ரன்களையும் சேர்த்தனர். 

ஆனால் அவர்களைத் தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர். இதனால் ஐக்கிய அரபு அமீரக அணி 36.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 203 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அமெரிக்க அணி தரப்பில் சௌரவ் நேத்ரவால்கர், கெஞ்சிகே ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன் மூலம் அமெரிக்க அணி 136 ரன்கள் வித்தியாஅசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.

இந்நிலையில் இப்போட்டியில் அமெரிக்க அணி வீரர் மிலிந்த் குமார் 155 ரன்களைக் குவித்ததன் மூலம் சாதனை ஒன்றையும் படைத்து அசத்தியுள்ளார். அதன்படி, 53 ஆண்டுகால ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் தனிநபர் இன்னிங்சில் 155 ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற பெருமையை மிலிந்த் குமார் பெற்றுள்ளார். இதுவரை இந்த வடிவத்தில் விளையாடிய 4773 வீரர்களில் எந்த ஒரு வீரரும் இந்த ஸ்கோரை அடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 63 முறை வீரர்கள் 150 முதல் 159 ரன்களுக்குள் அவுட் ஆனபோது இது நடந்துள்ளது. ஆனாலும் 155 ரன்களை யாராலும் எடுக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News