நான் கிட்டத்தட்ட சிரித்து சிரித்து அழுது விட்டேன்- குல்பதீன் செயல் குறித்து மார்ஷ்!

Updated: Wed, Jun 26 2024 13:33 IST
Image Source: Google

ஆஃப்கானிஸ்தான் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்று ஆட்டம் நேற்று நடைபெற்று முடிந்தது. இப்போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணியானது 8 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது. ஆஃப்கானிஸ்தானின் இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணியானது நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுடன் வெளியேறியுள்ளது.  

இந்நிலையில், இப்போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி வீரர் குல்பதீன் நைப் செய்த செயல் ஒன்று ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியிலும் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது. அதன்பின் வங்கதேச அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, இன்னிங்ஸின் 11ஆவது ஓவரை ஆஃப்கான் தரப்பில் நூர் அஹ்மத் வீசினார். அந்த ஓவரின் 5ஆவது பந்தை அவர் வீச முன்வருகையில், மழை வருவதை கவனித்த ஆஃப்கான் அணி பயிற்சியாளர் ஜானதன் டிராட் வீரர்களை சிறுது நேரம் பந்துவீச்சாமல் தாமதப்படுத்துமாறு சிக்னலை கொடுக்க எந்த வீரரும் முதலில் அதனை கவனிக்கவில்லை. 

ஆனால் கடைசியா ஸ்லீப் திசையில் நின்றுகொண்டிருந்த குல்பதீன் நைப், டிராட்டின் சிக்னலை கவனித்தவுடனே தசைபிடிப்பு ஏற்பட்டது போது மைதானத்து கிழே விழுந்து உருண்டார். இதனால் நடுவர் போட்டியை நிறுத்துடன் மழையும் வந்ததால் ஆட்டம் தமாதமானது. ஆனால் களத்தில் இருந்த பேட்டர்கள் முதற்கொண்டு குல்பதீன் நைபின் செயலைக் கண்டு சிரிப்பலையில் ஆழ்ந்தனர். இந்நிலையில் குல்பதீன் நைப் செய்த இந்த செயல் குறித்த காணொளியானது இணையத்தில் வைரலாகியது. இந்நிலையில் இச்சம்பவம் குறித்து ஆஸ்திரேலிய அணி கேப்டன் மிட்செல் மார்ஷ் தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய மிட்செல் மார்ஷ், “கிரிக்கெட் மைதானத்தில் நான் பார்த்த வேடிக்கையான விஷயங்களில் இதுவும் ஒன்று. நான் கிட்டத்தட்ட சிரித்து சிரித்து அழுது விட்டேன். ஆனால் நாள் முடிவில் அது விளையாட்டில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. எனவே நாம் இப்போது அதைப் பற்றி சிரிக்கலாம்.  ஆனால் குல்பதின் நைபின் செயலானது மிகவும் வேடிக்கையான ஒன்றாகும். மேலும் அவர் புத்திசாலி என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். மிட்செல் மார்ஷிடன் இந்த கருத்தானது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை