மேஜர் லீக் கிரிக்கெட் 2025: மிட்செல் ஓவன் மற்றும் ஆண்ட்ரிஸ் கஸ் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தின் மூலம் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் லாஸ் வாஷிங்டன் ஃப்ரீடம் அணி அபாரமான வெற்றியைப் பதிவுசெய்துள்ளது.

Advertisement

மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் வாஷிங்டன் ஃப்ரீடம் மற்றும் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த சூப்பர் கிங்ஸ் அணிக்கு சமித் படேல் மற்றும் கேப்டன் டூ பிளெசிஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஒருபக்கம் டூ பிளெசிஸ் அதிரடியாக விளையாடி வந்த நிலையில், மறுமுனையில் சமித் படேல் 24 ரன்களிலும், அடுத்து களமிறங்கிய சாய்தேஜா முக்காமல்லா 6 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் களமிறங்கிய மார்கஸ் ஸ்டொய்னிஸும் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். 

Advertisement

இதுல் அரைசதம் கடந்து அசத்திய டூ பிளெசிஸ் 8 பவுண்டரி, 4 சிக்ஸர்களுடன் 69 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் 32 ரன்களில் மார்கஸ் ஸ்டொய்னிஸ்னும், 31 ரன்களில் மிலிந்த் குமாரும் விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஷுபம் ரஞ்சனே 26 ரன்களையும் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தனர். இதன்மூலம் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்களைச் சேர்த்தது. வாஷிங்டன் அணி தரப்பில் மிட்செல் ஓவன் 3 விக்கெட்டுகளையும், கிளென் மேக்ஸ்வெல் 2 விக்கெட்டுகலையும் கைப்பற்றினர்.

அதன்பின் கடின இலக்கை நோக்கி விளையாடிய வாஷிங்டன் ஃப்ரீடம் அணியில் மிட்செல் ஓவன் மற்றும் ரச்சின் ரவீந்திரா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ரச்சின் ரவீந்திரா 11 ரன்களை மட்டுமே எடுத்த கையோடு ஆட்டமிழந்தர். அதன்பின் மிட்செல் ஓவனுடன் இணைந்த ஆண்ட்ரிஸ் கஸும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் உயரத்தொடங்கியது. இதில் இருவரும் அடுதடுத்து பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் பறக்கவிட்டு தங்களின் அரைசதங்களைப் பூர்த்தி செய்ததுடன், இரண்டாவது விக்கெட்டிற்கு 120 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். 

Also Read: LIVE Cricket Score

அதன்பின் சதத்தை நெருங்கிய மிட்செல் ஓவன் 8 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 89 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் கிளென் மேக்ஸ்வெல் 20 ரன்களுடன் நடையைக் கட்டினார். அதேசமயம் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஆண்ட்ரிஸ் கஸ் 6 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 80 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் வாஷிங்டன் ஃப்ரீடம் அணி 19.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News