உலகக் கோப்பையில் தர்மசாலாவில் நடைபெற்ற இன்றையப் போட்டியில் ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகள் மோதின. இந்தப் போட்டியில் 5  ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா த்ரில் வெற்றியைப் பதிவு செய்தது. இந்த உலகக் கோப்பைத் தொடரில் இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள ஆஸ்திரேலிய அணி 4 வெற்றிகளைப் பெற்று 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 4ஆவது இடத்தில் உள்ளது. 

Advertisement

இன்றையப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்ற போதிலும், அந்த அணியின் வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கின் பந்துவீச்சு சிறப்பானதாக அமையவில்லை. இன்றையப் போட்டியில் 9 ஓவர்கள் வீசிய அவர் விக்கெட் ஏதும் எடுக்காமல் 89 ரன்களை வாரி வழங்கினார். உலகக் கோப்பை போட்டி ஒன்றில் விக்கெட் எடுக்காமல் மிட்செல் ஸ்டார்க் பந்துவீச்சை வெளிப்படுத்தியது இதுவே முதல் முறையாகும். 

Advertisement

கடந்த 2015 மற்றும் 2023 ஆம் ஆண்டுகள் இடைவெளியில் உலகக்  கோப்பையில் 23 போட்டிகளில் விளையாடியுள்ள மிட்செல் ஸ்டார்க் முதல் முறையாக விக்கெட்டின்றி பந்துவீச்சை வெளிப்படுத்தியுள்ளார். ஆஸ்திரேலியா சார்பில் உலகக் கோப்பையில் அதிகபட்ச ரன்களை விட்டுக்கொடுத்த  பந்துவீச்சாளர் என்ற தனது பழைய விரும்பத்தகாத சாதனையை முறியடித்து மீண்டும் அந்த சாதனைக்கு மிட்செல் ஸ்டார்க் சொந்தக்காரராகியுள்ளது குறிப்பிடத்தக்கது.  

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News