இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஸ்திரேலிய அணியானது தற்சமயம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றது. இதில் நடைபெற்ற முதலிரண்டு ஒருநாள் போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணியானது வெற்றிபெற்று அசத்தியதுடன் 2-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலை வகித்து வருகிறது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியானது செஸ்டர் லீ ஸ்ட்ரீட்டில் இன்று நடைபெறவுள்ளது.

Advertisement

இதில் ஏற்கெனவே இங்கிலாந்து அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியுள்ளதால் இப்போட்டியில் கம்பேக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் அடுத்தடுத்து வெற்றிகளை பெற்றுள்ள ஆஸ்திரேலிய அணி இப்போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் விளையாடவுள்ளதால், இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றன. 

Advertisement

இந்நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்த ஒருநாள் தொடரில் மிட்செல் ஸ்டார்க் மேற்கொண்டு ஒரு விக்கெட்டை வீழ்த்தும் பட்சத்தில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் வரிசையில் மூன்றாம் இடத்தைப் பிடிப்பார். இந்த பட்டியலில் தற்போது முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சன் மற்றும் மிட்செல் ஸ்டார்க் இருவரும் தலா 239 விக்கெட்டுகளை வீழ்த்தி மூன்றாம் இடத்தை பகிர்ந்துள்ளார்.  

அதேசமயம் இந்த பட்டியலின் முதலிடத்தில் கிளென் மெக்ராத் மற்றும் பிரெட் லீ ஆகியோர் தலா 380 விக்கெட்டுகளை கைப்பற்றி முதலிடத்தை பகிர்ந்துள்ளனர். அவர்களுக்கு அடுத்த இடத்தில் மறைந்த ஜாம்பவன் ஷேன் வார்னே 291 விக்கெட்டுகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார். மேலும் மிட்செல் ஸ்டார்க் இதுவரை ஆஸ்திரேலிய அணிக்காக 122 போட்டிகளில் விளையாடி 239 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இது தவிர, இந்தப் போட்டியில் ஸ்டார்க் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினால், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் இலங்கை ஜாம்பவான் முத்தையா முரளிதரனுடன் இணைந்து இரண்டாவது இடத்தைப் பிடிப்பார். தற்போது மிட்செல் ​​ஸ்டார்க் 9 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதேசமயம் முத்தையா முரளிதரன் தனது வாழ்நாளில் 10 முறை ஒருநாள் கிரிக்கெட்டில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். 

ஆஸ்திரேலிய ஒருநாள் அணி: மிட்ச் மார்ஷ் (கேப்டன்), சீன் அபோட், அலெக்ஸ் கேரி, நாதன் எல்லிஸ், ஜேக் ஃபிரேசர்-மெக்குர்க், கேமரூன் கிரீன், ஆரோன் ஹார்டி, ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், மார்னஸ் லாபுசாக்னே, கிளென் மேக்ஸ்வெல், மேத்யூ ஷார்ட், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஸாம்பா, கூப்பர் கன்னொலி.

Advertisement

இங்கிலாந்து ஒருநாள் அணி: ஹாரி புரூக் (கேப்டன்), ஜோஃப்ரா ஆர்ச்சர், கஸ் அட்கின்சன், ஜேக்கப் பெத்தேல், லியாம் லிவிங்ஸ்டோன், பிரைடன் கார்ஸ், பென் டக்கெட், ஜோஷ் ஹல், வில் ஜாக்ஸ், மேத்யூ பாட்ஸ், ஆதில் ரஷித், பில் சால்ட், ஜேமி ஸ்மித், ரீஸ் டாப்லி, ஜான் டர்னர்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News