West Indies vs Australia Test 2025: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் மூலம் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் சர்வதேச கிரிக்கெட்டில் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். 

Advertisement

வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணியானது 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஜூன் 25ஆம் தேதி பார்படாஸில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இப்போட்டியின் மூலம் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். 

Advertisement

டெஸ்ட் கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகள்

ஸ்டார்க் இதுவரை விளையாடிய 97 டெஸ்ட் போட்டிகளில் 186 இன்னிங்ஸ்களில் 387 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்நிலையில் இந்தத் தொடரில் அவர் 13 விக்கெட்டுகளை வீழ்த்தினால், ஆஸ்திரேலியாவுக்காக டெஸ்ட் போட்டிகளில் 400 விக்கெட்டுகளை வீழ்த்திய நான்காவது பந்து வீச்சாளர் என்ற பெருமையைப் பெறுவார். இதுவரை, ஷேன் வார்ன், க்ளென் மெக்ராத் மற்றும் நாதன் லையன் ஆகியோர் மட்டுமே இந்த சாதனையை படைத்துள்ளனர்.

பிரெட் லீயை வீழ்த்தும் வாய்ப்பு

இதுதவிர்த்து இந்த தொடரில்  மிட்செல்ல் ஸ்டார்க் மேலும் 9 விக்கெட்டுகளை கைப்பற்றும் பட்சத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது வீரர் எனும் பெருமையையும் பெறுவார். தற்போது அந்த அணியின் முன்னாள் வீரர் பிரெட் லீ  322 போட்டிகளில் 392 இன்னிங்ஸ்களில் 718 விக்கெட்டுகளை வீழ்த்தி மூன்றாவது இடத்தில் உள்ளார். அதேசமயம் மிட்செல் ஸ்டார்க் 289 போட்டிகளில் 378 இன்னிங்ஸ்களில் 710 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

Advertisement

Also Read: LIVE Cricket Score

ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி: பேட் கம்மின்ஸ் (கேப்டன்), சீன் அபோட், ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், உஸ்மான் கவாஜா, சாம் கோன்ஸ்டாஸ், மேத்யூ குஹ்னெமன், மார்னஸ் லபுஷாக்னே, நாதன் லையன், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், பியூ வெப்ஸ்டர்

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News