அமெரிக்காவின் டி20 லீக் தொடரான மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசன் இன்று கோலாகலமாக தொடங்கியது. இத்தொடரில் இன்று நாடைபெற்ற இரண்டாவது லீக் ஆட்டத்தில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடரஸ் அணியானது வெற்றிபெற்று அசத்தியது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த நைட் ரைடர்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்களைச் சேர்த்தது.

Advertisement

அந்த அணியில் அதிகபட்சமாக உன்முக்த் சந்த் அரைசதம் கடந்ததுடன் 68 ரன்களைச் சேர்த்தார். சூப்பர் கிங்ஸ் தரப்பில் ஸியா உல் ஹக், முகமது மொஹ்சின், மார்கஸ் ஸ்டொய்னிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய சூப்பர் கிங்ஸ் அணிக்கு தொடக்க வீரர் டெவான் கான்வே அரைசதம் அடித்து அசத்தியதுடன் 53 ரன்களைக் குவித்தார். 

Advertisement

ஆனால் அவரைத்தவிர்த்து மற்ற நட்சத்திர வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்ததன் காரணமாக சூப்பர் கிங்ஸ் அணியால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணியானது 12 ரன்கள் வித்தியாசத்தில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது. மேலும் இப்போட்டியில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய அலி கான் ஆட்டநாயகன் விருதை வென்றார். 

இந்நிலையில் இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணியில் உன்முக்த் சந்தைத் தவிர்த்து மற்ற எந்த வீரரும் சரியான பங்களிப்பை வழங்கமுடியவில்லை. இதில் அபாரமாக விளையாடிய உன்முக்த் சந்த் 45 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் என 68 ரன்களைக் குவித்து விக்கெட்டை இழந்தார். அந்த அணியில் அதிகபட்ச ஸ்கோரை பதிவுசெய்த வீரராகவும் உன்முக்த் சந்த் இன்றைய போட்டியில் இருந்துள்ளார். 

 

முன்னதாக கடந்த 2012ஆம் ஆண்டு இந்திய அண்டர்19 அணியை வழிநடத்திய உன்முக்த் சந்த் ஐசிசி யு19 உலகக்கோப்பை தொடரையும் வென்றுள்ளார். மேற்கொண்டு ஐபிஎல் தொடரிலும் விளையாடிய அவரால் சரியான ஃபார்ம் இல்லாத காரணத்தால் அணியில் வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வந்தார். மேற்கொண்டு இந்திய அணியிலும் அவரால் இடம்பிடிக்க முடியாத காரணத்தால் கடந்த 2021ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்து தற்போது அமெரிக்காவில் விளையாடி வருகிறார். 

Advertisement

மேற்கொண்டு அமெரிக்காவின் உள்ளூர் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவருக்கு, நடைபெற்று முடிந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலேயே வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு அங்கு வாய்ப்பு கிடைக்கைவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது அவர் எம்எல்சி தொடரில் சிறப்பாக செயல்படுவதன் காரணமாக நிச்சயம் அமெரிக்க அணிக்காக தேர்வு செய்யப்படுவார் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News