MLC 2024: சியாட்டில் ஆர்காஸை வீழ்த்தி வாஷிங்டன் ஃப்ரீடம் அணி அசத்தல் வெற்றி!

Updated: Fri, Jul 12 2024 11:09 IST
Image Source: Google

அமெரிக்காவில் நடைபெற்று வரும் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 8ஆவது லீக் ஆட்டத்தில் சியாட்டில் ஆர்காஸ் - வாஷிங்டன் ஃப்ரீடம் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆர்காஸ் அணியில் ரிக்கெல்டன் 4 ரன்களுக்கும், நௌமன் அன்வர் 3 ரன்களிலும் என விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். அதன்பின் இணைந்த குயின்டன் டி காக் - ஹென்ரிச் கிளாசென் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். 

இதில் டி காக் 24 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் ஹென்ரிச் கிளாசென் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். அதன்பின் 51 ரன்கள் எடுத்த நிலையில் கிளாசெனும் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களும் எதிரணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். இதனால் சியாட்டில் ஆர்காஸ் அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 124 ரன்களுக்கு ஆல் அவுட்டானது, ஃப்ரீடம் அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய லோக்கி ஃபெர்குசன் 4 விக்கெட்டுகளையும், நேத்ரவால்கர் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ஃப்ரீடம் அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அந்த அணியின் நட்சத்திர வீரர்கள் டிராவிஸ் ஹெட் ரன்கள் ஏதுமின்றியும், கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 12 ரன்களிலும், ரச்சின் ரவீந்திரா 26 ரன்களிலும், முக்தார் அஹ்மத் 8 ரன்களுக்கும், கிளென் மேக்ஸ்வெல் 10 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் அந்த அணி 64 ரன்களில் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர். இதனையடுத்து இணைந்த லஹிரு மிலந்தா - ஒபுஸ் பினார் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். 

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

இருவரும் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணியின் ஸ்கோரையும் உயர்த்தி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த லஹிரு மிலந்தா 33 ரன்களையும், ஓபுஸ் பினார் 31 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் வாஷிங்டன் ஃபிரீடம் அணி 18.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் சியாட்டில் ஆர்காஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இப்போட்டியில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய லோக்கி ஃபெர்குசன் ஆட்டநாயகன் விருதை வென்றார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை