Glenn Maxwell Century: மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் சதமடித்து அசத்தியதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிக சதங்களை அடித்த ஆஸ்திரேலிய வீரர்கள் வரிசையில் கிளென் மேக்ஸ்வெல் கூட்டு முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். 

Advertisement

வாஷிங்டன் ஃப்ரீடம் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான எம்எல்சி லீக் போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த வாஷிங்டன் ஃப்ரீடம் அணியில் கேப்டன் கிளென் மேக்ஸ்வெல் சதமடித்து அசத்தியதுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 2 பவுண்டரி, 13 சிக்ஸர்களுடன் 106 ரன்களைச் சேர்த்து அசத்தினார். இதன்மூலம் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 208 ரன்களைச் சேர்த்தது.

Advertisement

பின்னர் கடின இலக்கை நோக்கி விளையாடிய நைட் ரைடர்ஸ் அணியின் டாப் ஆர்டர் வீரர்க்ள் சோபிக்க தவறினர். இதில் சைஃப் பதர் 32 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறியதன் காரணமாக அந்த அணி 16.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 95 ரன்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம் வாஷிங்டன் ஃப்ரீடம் அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது.

இந்நிலையில் இப்போட்டியின் மூலம் கிளென் மேக்ஸ்வெல் சிறப்பு சாதனையையும் படைத்துள்ளார். அதன்படி இந்த போட்டியில் மேக்ஸ்வெல் சதமடித்ததன் மூலம், டி20 கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்காக அதிக சதங்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் மேக்ஸ்வெல் கூட்டு முதல் இடத்தைப் பிடித்தார். இது மேக்ஸ்வெல்லின் டி20 வாழ்க்கையில் 8வது சதமாகும். அவருக்கு முன், மைக்கேல் கிளிங்கர், ஆரோன் பின்ச் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோரும் டி20 கிரிக்கெட்டில் 8 சதங்களை அடித்துள்ளனர். 

Also Read: LIVE Cricket Score

முன்னதாக கிளென் மேக்ஸ்வெல் ஐபிஎல் 2025 இல் பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஒரு பகுதியாக இருந்தார். ஆனால் இந்த ஐபிஎல் சீசன் அவர் எதிர்பார்த்தது போல் அமையவில்லை. ஏனெனில் இந்த சீசனில் அவர் ஆறு இன்னிங்ஸ்களில் விளையாடி 48 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். அதில் அவரின் சிறந்த ஸ்கோர் 30 ரன்கள். அதன்பின் விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக சீசனின் நடுப்பகுதியில் வெளியேறியதுடன், சமீபத்தில் சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாகவும் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது,

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News