Kieron Pollard Record: டெக்சாஸ் சூப்பர் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் எம்ஐ நியூயார்க் அணிக்காக விளையாடிய கீரன் பொல்லார்ட் அரைசதம் கடந்ததன் மூலம் டி20 கிரிக்கெட்டில் அலெக்ஸ் ஹேல்ஸின் சாதனையை முறியடித்துள்ளார். 

Advertisement

எம்எல்சி தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் 39 ரன்கள் வித்தியாசத்தில் எம்ஐ நியூயார்க் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியானது நடப்பு எம்எல்சி தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது. மேலும் இப்போட்டியில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய சூப்பர் கிங்ஸ் அணியின் அகீல் ஹொசைன் ஆட்டநாயகன் விருதை வென்றார். 

Advertisement

அதேசமயம் இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நியூயார்க் அணியின் நட்சத்திர வீரர் கீரன் பொல்லார்ட் சிறப்பு சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதன்படி இப்போட்டியில் கீரன் பொல்லார்ட் 5 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்கள் என 70 ரன்களைச் சேர்த்ததன் மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களை எடுத்த வீரர்கள் பட்டியலில் இங்கிலாந்து அலெக்ஸ் ஹேல்ஸின் சாதனையை முறியடித்து இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். 

முன்னதாக அலெக்ஸ் ஹேல்ஸ் 501 டி20 போட்டிகளில் 497 இன்னிங்ஸ்களில் விளையாடி 13,735 ரன்களைச் சேர்த்து இரண்டாம் இடத்தில் இருந்தார். ஆனால் இப்போட்டியில் பொல்லார்ட் அரைசதம் கடந்ததன் மூலம் 702 டி20 போட்டிகளில் 624 இன்னிங்ஸ்களில் 13,738 ரன்கள் எடுத்து இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்த பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஜாம்பவான் கிறிஸ் கெயில் 14, 562 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்தவர்கள்

  • 14,562 – கிறிஸ் கெய்ல் (455 இன்னிங்ஸ்)
  • 13,738* – கீரான் பொல்லார்ட் (624 இன்னிங்ஸ்)
  • 13,735 – அலெக்ஸ் ஹேல்ஸ் (497 இன்னிங்ஸ்)
  • 13,571 – ஷோயப் மாலிக் (515 இன்னிங்ஸ்)
  • 13,543 – விராட் கோலி (397 இன்னிங்ஸ்)

இப்போட்டி குறித்து பேசினால், டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணியில் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் 103 ரன்களையும், டோனவன் ஃபெரீரா 53 ரன்களையும் சேர்த்தனர். இதன் மூலம் சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 223 ரன்களைச் சேர்த்தது. நியூயார்க் தரப்பில் ஜார்ஜ் லிண்டே, ருஷில் உகர்கர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

Advertisement

Also Read: LIVE Cricket Score

பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய எம்ஐ நியூயார்க் அணியில் அதிகபட்சமாக கீரன் பொல்லர்ட் 70 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் யாரும் பெரிதளவில் சோபிக்க தவறினர். இதன் காரணமாக எம்ஐ நியூயார்க்  அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்களை மட்டுமே சேர்த்தது. சூப்பர் கிங்ஸ் தரப்பில் அகீல் ஹொசைன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் சூப்பர் கிங்ஸ் அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் நியூயார்க் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News