மேஜர் லீக் கிரிக்கெட் 2025: உன்முக்த் சந்த் மற்றும் சைஃப் பதரின் அதிரடியான ஆட்டத்தின் மூலம் சியாட்டில் ஆர்கஸ் அணிக்கு எதிரான போட்டியில் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணி அபாரமான வெற்றியைப் பதிவுசெய்துள்ளது.

Advertisement

சியாட்டில் ஆர்காஸ் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைட்ரஸ் அணிகளுக்கு இடையேயான எல்எல்சி லீக் போட்டி இன்று டல்லாஸில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆர்காஸ் அணிக்கு ஷியாம் ஜஹாங்கீர் மற்றும் டேவிட் வார்னர் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அதிரடியாக விளையாடி வந்த ஜஹாங்கீர் 26 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து டேவிட் வார்னரும் 38 ரன்களில் பெவிலியன் திரும்பினார். பின்னர் களமிறங்கிய ஆரோன் ஜோன்ஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணியின் ஸ்கோரையும் உயர்த்தும் முயற்சியில் இறங்கினார். 

Advertisement

ஆனால் மறுமுனையில் களமிறங்கிய நட்சத்திர வீரர்கள் கைல் மேயர்ஸ் 14 ரன்னிலும், கேப்டன் ஹென்ரிச் கிளாசென் 4 ரன்னிலும், ஷிம்ரான் ஹெட்மையர் 19 ரன்னிலும் என விக்கெட்டை இழக்க, 44 ரன்களைச் சேர்த்த கையோடு ஆரோன் ஜோன்ஸும் ஆட்டமிழந்தார். இதன் காரணமாக சியாட்டில் ஆர்காஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 177 ரன்களைச் சேர்த்தது. நைட் ரைடர்ஸ் அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஆண்ட்ரே ரஸல் 3 விக்கெட்டுகளையும், கோர்ன் ட்ரை, வான் ஷால்விக் மற்றும் ஜேசன் ஹோல்டர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய நைட் ரைடர்ஸ் அணியில் ஆலெக்ஸ் ஹேல்ஸ் மற்றும் நிதிஷ் குமார் ஆகியோர் தலா ஒரு ரன் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த உன்முக்த் சந்த் மற்றும் சைஃப் பதார் இணை விக்கெட் இழப்பை தடுத்ததுடன், அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். மேலும் இருவரும் தங்களின் அரைசதங்களைப் பூர்த்தி செய்து அசத்தியதுடன் மூன்றாவது விக்கெட்டிற்கு 139 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியின் வெற்றிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர். 

Also Read: LIVE Cricket Score

அதன்பின் 2 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 54 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் சைஃப் பதர் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ரோவ்மன் பாவெலும் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தர். இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த உன்முக்த் சந்த் 10 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 86 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணி 18.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் சியாட்டில் ஆர்காஸ் அணியை வீழ்த்தி நடப்பு சீசனில் முதல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News