மேஜர் லீக் கிரிக்கெட் 2025: எம்ஐ நியூயார்க் அணிக்கு எதிரான லீக் போட்டியில் வாஷிங்டன் ஃப்ரீடம் அணி மிட்செல் ஓவன் மற்றும் மார்க் சாப்மேன் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தின் மூலமாக த்ரில் வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. 

Advertisement

எம்எல்சி தொடரில் இன்று நடைபெற்ற 11ஆவது லீக் போட்டியில் எம்ஐ நியூயார்க் மற்றும் வாஷிங்டன் ஃப்ரீடம் அணிகள் பலப்பரீட்சை. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த நியூயார்க் அணிக்கு குயின்டன் டி காக் மற்றும் மொனாங்க் படேல் இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 70 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில் மொனாங்க் படேல் 35 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதேசமயம் மறுமுனையில் அதிரடியாக விளையாடிய குயின்டன் டி காக் தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்தார். 

Advertisement

பின் 7 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 55 ரன்களில் டி காக் ஆட்டமிழக்க, பின்னர் ஜோடி சேர்ந்த மைக்கேல் பிரேஸ்வெல் மற்றும் நிக்கோலஸ் பூரன் ஜோடி ஸ்கோரை உயர்த்தினர். இதில் நிக்கோல பூரன் 33 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பிரேஸ்வெல் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 42 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இத்ன்மூலம் எம்ஐ நியூயார்க் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்களைச் சேர்த்தது. வாஷிங்டன் அணி தரப்பில் மேக்ஸ்வெல், ஓவன் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். 

அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய வாஷிங்டன் அணிக்கு மிட்செல் ஓவன் மற்றும் ரச்சின் ரவீந்திரா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஓவன் ஒரு பக்கம் அதிரடியாக விளையாடிய நிலையில், மறுமுனையில் ரச்சின் ரவீந்திரா 10  ரன்னிலும், அடுத்து வந்த ஆண்ட்ரிஸ் கஸ் 14 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். அவர்களைத் தொடர்ந்து அரைசதம் கடந்து விளையாடி வந்த மிட்செல் ஓவனும் 5 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 60 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய மார்க் சாப்மேன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினார். 

Also Read: LIVE Cricket Score

ஆனால் மறுபக்கம் களமிறங்கிய ஜேக் எட்வர்ட்ஸ் 30 ரன்னிலும், கேப்டன் மேக்ஸ்வெல் 16 ரன்னிலும், பியனர் 6 ரன்னிலும், முக்தார் அஹ்மத் மற்றும் மார்க் ஆதிர் ஆகியோர் சொற்ப ரன்களிலும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். அதேசமயம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மார்க் சாப்மேன் 45 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் வாஷிங்டன் ஃப்ரீடம் அணி 19.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 2 விக்கெட் வித்தியாசத்தில் எம்ஐ கேப்டவுன் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News