மேஜர் லீக் கிரிக்கெட் 2025: டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் சான் ஃபிரான்ஸிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணி நடப்பு சீசனில் தொடர்ச்சியாக தங்களுடைய 4ஆவது வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. 

Advertisement

எம்எல்சி தொடரில் இன்று நடைபெற்ற 10ஆவது லீக் போட்டியில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் மற்றும் சான் ஃபிரான்ஸிகோ யூனிகார்ன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் மற்றும் டெவான் கான்வே இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் டூ பிளெசிஸ் ஒருபக்கம் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்திய நிலையில், மறுபக்கம் விளையாடிய டெவான் கான்வே 23 ரன்களிலும், அடுத்து வந்த சாய்தேஜா முக்காமல்லா 38 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழந்தனர். 

Advertisement

ஆனாலும் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஃபாஃப் டூ பிளெசிஸ் தனது சதத்தைப் பூர்த்தி செய்து அசத்தினார். அதன்பின் 51 பந்துகளில் 6 பவுண்டரி, 7 சிக்ஸர்கள் என 100 ரன்களைச் சேர்த்த கையோடு டூ பிளெசிஸ் தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 198 ரன்களைக் குவித்தது. யூனிகார்ன்ஸ் அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய சேவியர் பார்ட்லெட், ஹாரிச் ராவுஃப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய சான் ஃபிரான்ஸிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணிக்கு கேப்டன் மேத்யூ ஷார்ட் மற்றும் ஃபின் ஆலன் இணை அதிரடியாக தொடங்கியதுடன் அணிக்கு தேவையான அடித்தளத்தையும் அமைத்துக் கொடுத்தனர். இதில் இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தங்களுடைய அரைசதங்களை பூர்த்தி செய்ததுடன், முதல் விக்கெட்டிற்கு 117 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். அதன்பின் 6 பவுண்டரி, 4 சிக்ஸர்களுடன் 61 ரன்களில் மேத்யூ ஷார்ட்டும், 4 பவுண்டரி, 8 சிக்ஸர்களுடன் 78 ரன்களில் ஃபின் ஆலனும் விக்கெட்டை இழந்தனர். 

Also Read: LIVE Cricket Score

அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய ஜேக் ஃபிரேசர் மெக்குர்கும் தனது பங்கிற்கு 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 37 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். இருப்பினும் சான் ஃபிரான்ஸிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணி 16.1 ஓவர்களிலேயே இலக்கி எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் டக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் யூனிகார்ன்ஸ் அணி நடப்பு சீசனில் 4ஆவது வெற்றியைப் பதிவுசெய்த நிலையில், சூப்பர் கிங்ஸ் அணி முதல் தோல்வியைத் தழுவியுள்ளது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News