MLC 2025: சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகர்ன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியிலும் சியாட்டில் ஆர்காஸ் அணி தோல்வியடைந்ததன் மூலம் நடப்பு எம்எல்சி தொடரில் தொடர்ச்சியாக 5ஆவது தோல்வியைத் தழுவி பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்துள்ளது. 

Advertisement

மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 16ஆவது லீக் போட்டியில் சீயாட்டில் ஆர்காஸ் மற்றும் சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த யூனிகார்ன்ஸ் அணியில் ஃபின் ஆலன் 4 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். பின்னர் இணைந்த கேப்டன் மேத்யூ ஷார்ட் - ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் மெக்குர்க் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 34 ரன்னிலும், அரைசதம் கடந்து அசத்திய மேத்யூ ஷார்ட் 7 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 52 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தார்.

Advertisement

அதன்பின் களமிறங்கிய சஞ்சய் கிருஷ்ணமூர்த்தி, ஹசன் கான், சேவியார் பார்ட்லெட், ஹாமில்டன் உள்ளிட்டோர் சோபிக்க தவறிய நிலையில், 6ஆவது விக்கெட்டிற்கு களமிறங்கிய ரொமாரியோ ஷெஃபெர்ட் அரைசதம் கடந்ததுடன் 4 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 56 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தனர். இதன்மூலம் சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்களைச் சேர்த்தது. ஆர்காஸ் அணி தரப்பில் ஜெரால்ட் கோட்ஸி மற்றும் ஹர்மீத் சிங் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ஆர்காஸ் அணிக்கு ஷியாம் ஜஹாங்கீர் மற்றும் டேவிட் வார்னர் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் இணைந்து 66 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில் ஷியாம் ஜஹாங்கீர் 3 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 40 ரன்னிலும், டேவிட் வார்னர் 23 ரன்களிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் களமிறங்கிய கைல் மேயர்ஸ் ரன்கள் ஏதுமின்றியும், கேப்டன் ஹென்ரிச் கிளாசென் 7 ரன்னிலும், சுஜித் நாயக் 15 ரன்களிலும், ஜெரால்ட் கோட்ஸி 7 ரன்னிலும், கேமரூன் கேனன் 9 ரன்னிலும் என ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். 

Also Read: LIVE Cricket Score

அதன்பின் ஷிம்ரான் ஹெட்மையர் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 30 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் அந்த அணி 18.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 144 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. யூனிகார்ன்ஸ் தரப்பில் ஹாரிஸ் ராவுஃப் 4 விக்கெட்டுகளையும், மேத்யூ ஷார்ட் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் சியாட்டில் ஆர்காஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News