எம்எல்சி 2025: வாஷிங்டன் ஃப்ரீடம் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியைத் தழுவிய நிலையிலும், எம்ஐ கேப்டவுன் அணி ரன் ரேட் அடிப்படையில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது.

Advertisement

மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று நடைபெற்ற 29ஆவது லீக் போட்டியில் எம்ஐ நியூயார்க் மற்றும் வாஷிங்டன் ஃப்ரீடம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஃபுளோரிடாவில் நடைபெற்ற இப்போட்டியனது மழை காரணமாக தாமதமானது. இதன் காரணமாக இப்போட்டியானது 18 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்பின் இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த எம்ஐ நியூயார்க் அணியில் தொடக்க வீரர் மொனாங்க் படேல் 6 ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.

Advertisement

அதன்பின் களமிறங்கிய கேப்டன் நிக்கோலஸ் பூரன் மற்றும் தஜிந்தர் தில்லான் தலா 12 ரன்னிலும், ஷரத் லும்பா ரன்கள் ஏதுமின்றியும என விக்கெட்டை இழந்தனர். அவர்களைத்தொடர்ந்து அணியின் மற்றொரு தொடக்க வீரர் குன்வர்ஜீத் சிங் 30 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அதன்பின் களமிறங்கிய வீரர்களில் ஹெத் ரிச்சர்ட்ஸ் மற்றும் சன்னி படேல் ஆகியோர் தலா 16 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் எம்ஐ நியூயார்க் அணி 18 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்களைச் சேர்த்தது. வாஷிங்டன் அணி தரப்பில் கேப்டன் கிளென் மேக்ஸ்வெல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய வாஷிங்டன் ஃப்ரீடம் அணிக்கு மிட்செல் ஓவன் மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். இதில் மிட்செல் ஓவன் 12 ரன்களிலும், ரச்சின் ரவீந்திரா 9 ரன்னிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த ஆண்ட்ரிஸ் கஸ் மற்றும் மார்க் சாப்மேன் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன் அணியின் வெற்றிக்கு வழிவகை செய்தனர். அதன்பின் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 27 ரன்களிலும், அடுத்து வந்த கிளென் மேக்ஸ்வெல் 2 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். 

Also Read: LIVE Cricket Score

இருப்பினும் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த ஆண்ட்ரிஸ் கஸ் 7 பவுண்டரிகளுடன் 46 ரன்களையும், கிளென் பிலீப்ஸ் 14 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் வாஷிங்டன் ஃப்ரீடம் அணி 15 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் எம்ஐ நியூயார்க் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இப்போட்டியில் எம்ஐ நியூயார்க் அணி தோல்வியைத் தழுவிய நிலையிலும், ரன் ரேட் அடிப்படையில் நடப்பு எம்எல்சி தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கும் முன்னேறி அசத்தியுள்ளது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News