MLC 2025: லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியிலும் வாஷிங்டன் ஃப்ரீடம் அணி வெற்றி பெற்றதன் மூலம் நடப்பு எம்எல்சி தொடரில் 5ஆவது வெற்றியைப் பதிவுசெய்ததுடன் ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பையும் உறுதிசெய்துள்ளது. 

Advertisement

மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 17ஆவது லீக் போட்டியில் வாஷிங்டன் ஃப்ரீடம் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த நைட் ரைடர்ஸ் அணிக்கு உன்முக்த் சந்த் மற்றும் ஆண்ட்ரே ஃபிளெட்சர் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடியதுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 130 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் உன்முக்த் சந்த் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 41 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

Advertisement

அதேசமயம் மறுபக்கம் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆண்ட்ரே ஃபிளெட்சர் சதமடித்து அசத்திய நிலையில் 7 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என 104 ரன்களைச் சேர்த்து ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் பெவிலியான் திரும்பினார். அடுத்து களமிறங்கிய வீரர்களில் ஷெர்ஃபேன் ரூத்ரஃபோர்ட் 20 ரன்களையும், ஆண்ட்ரே ரஸல் 30 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 213 ரன்களைச் சேர்த்தது. வாஷிங்டன் ஃப்ரீட்ம் தரப்பில் இயான் ஹாலண்ட் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். 

இதையடுத்து இலக்கை நோக்கி விலையாடிய வாஷிங்டன் அணிக்கு மிட்செல் ஓவன் - ரச்சின் ரவீந்திரா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய மிட்செல் ஓவன் 3 பவுண்டரி, 4 சிக்ஸர்களுடன் 43 ரன்களிலும், ரச்சின் ரவீந்திரா 18 ரன்னிலும் என ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய ஆண்ட்ரிஸ் கஸ் ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 31 ரன்களையும், கேப்டன் கிளென் மேக்ஸ்வெல் 2 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 42 ரன்னிலும் விக்கெட்டை இழந்தனர். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய எட்வர்ட்ஸும் 9 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர். 

Also Read: LIVE Cricket Score

அதன்பின் களமிறங்கிய கிளென் பிலிப்ஸ் - ஒபஸ் பியினார் இணை பொறுப்புடன் விளையாடி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர். இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கிளென் பிலிப்ஸ் 33 ரன்களையும், ஒபஸ் பியினார் 23 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் வாஷிங்டன் ஃப்ரீடம் அணி கடைசி பந்தில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மிட்செல் ஓவன் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News