அமெரிக்காவில் தொடங்கப்பட்டுள்ள மேஜர் லீக் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற 8ஆவது லீக் ஆட்டத்தில் லாஸ் ஏஞ்சலஸ் நைட் ரைடர்ஸ் - சான்பிரான்ஸிஸ்கோ யுனிகார்ன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற சான்பிரான்ஸிஸ்கோ அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு மேத்யூ வேட் - ஃபின் ஆலன் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடக்கம் கொடுத்தனர். இதில் ஃபின் ஆலன் 20  ரன்களிலும், அடுத்து கலமிறங்கிய மார்கஸ் ஸ்டொய்னிஸ் 39 ரன்களையும், ஷதாப் கான் 9 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். 

Advertisement

இருப்பினும் அதிரடியாக விளையாடி வந்த மேத்யூ வேட் அரைசதம் கடந்ததுடன், 7 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 78 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த கோரி ஆண்டர்சனும் 39 ரன்களைச் சேர்த்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்களைச் சேர்த்தது. நைட்ரைடர்ஸ் தரப்பில் ஆடம் ஸாம்பா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய நைட் ரைடர்ஸ் அணிக்கு ஜேசன் ராய் - உன்முகுந்த் சந்த் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் உன்முகுந்த் சந்த் 20 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதேசமயம் மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜேசன் ராய் 4 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 45 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 

பின்னர் களமிறங்கிய நிதிஷ் குமார் 31 ரன்களையும், ரைலீ ரூஸோவ் 8 ரன்களிலும், ஜஸ்கரன் மல்ஹோத்ரா 7 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். பின்னர் இணைந்த ஆண்ட்ரே ரஸல் - சுனில் நரைன் இணை அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். இருப்பினும் அந்த அணியால் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. 

இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஆண்ட்ரே ரஸல் 42 ரன்களையும், சுனில் நரைன் 28 ரன்களையும் சேர்த்திருந்தனர். இதன்மூலம் சான்பிரான்ஸிஸ்கோ அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் லாஸ் ஏஞ்சலஸ் நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News