பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 9ஆவது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற இரண்டாவது லீக் ஆட்டத்தில் பெஷாவர் ஸால்மி - குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பெஷாவர் ஸால்மி அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

Advertisement

இதையடுத்து களமிறங்கிய கிளாடியேட்டர்ஸ் அணிக்கு ஜேசன் ராய் - சௌத் சகீல் இணை அபாரமான தொடக்கத்தைக் கொடுத்ததுடன், இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினர். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 296 ரன்களைக் குவித்தது. இதில் அதிகபட்சமாக ஜேசன் ராய் 6 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 74 ரன்களையும், சௌத் சகீல் 9 பவுண்டரி, 2 சிச்கர்கள் என 75 ரன்களையும் சேர்த்தனர்.

Advertisement

அதன்பின் கடின இலக்கை நோக்கி விளையாடிய பெஷாவர் ஸால்மி அணியில் சௌம் அயூப் 42 ரன்களையும், கேப்டன் பாபர் ஆசாம் 4 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 68 ரன்களையும் எடுத்து அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்த நிலையிலும், மற்ற வீரர்கள் சோபிக்க தவறியதால் அந்த அணி 20 ஓவர்களில் 190 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் பெஷாவர் ஸால்மி அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. 

இந்நிலையில் இப்போட்டியில் கிளாடியேட்டர்ஸ் அணிக்காக விளையாடிவரும் இடது கை வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர், பெஷாவர் ஸால்மி அணியின் கேப்டன் பாபர் ஆசாமிற்கு அபாயகரமான பவுன்சர் ஒன்றை வீசினார். இதனை சற்றும் எதிர்பார்க்காத பாபர் அசாம் அந்த பந்தை அடிக்க முடியாமல் தடுமாறினார். இதையடுத்து அவர்கள் இருவருக்கும் இடையே சில உரையாடல்களும் இருந்தன. இந்நிலையில் இக்காணொளியானது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையடுத்து, போட்டிக்குப் பிந்தைய செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமீரிடம், பவுன்சருக்குப் பிறகு பாபருடனான உங்களது உரையாடல் என்ன என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அந்த கேள்விக்கு பதிலளித்த அமீர், "நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பும் உரையாடல் பவுன்சர் பற்றியது, அந்த பந்து மிக வேகமாக சென்றதாகவும், அதனல் பந்தை என்னால் கணிக்க முடியவில்லை என்றும் பாபர் கூறினார். அவர் ஒரு நல்ல வீரர் ஆனால் எனது நோக்கம் எப்போதுமே சிரந்த பேட்டர்களின் விக்கெட்டுகளை வீழ்த்துவதுதான்” என்று தெரிவித்தார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News