லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 6ஆவது லீக் ஆட்டத்தில் சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் மற்றும் குஜராத் கிரேட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய அந்த அணியில் கேப்டன் ஷிகர் தவான் 38 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் யாரும் பெரிதளவில் சோபிக்க தவறி, சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் குஜராத் கிரேட்ஸ் அணியானது 7 விக்கெட்டுகளை இழந்து 123 ரன்களை மட்டுமே சேர்த்தது. சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் அணி தரப்பில் சுபோத் பாட்டி 2 விக்கெட்டுகளையும், ஹமித், ரஸாக், பவன் நெகி மற்றும் ஜெசல் கரியா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றி அசத்தினர்.

Advertisement

இதனையடுத்து எளிய இலக்கை நோக்கி விளையாடிய சூப்பர் ஸ்டார்ஸ் அணியில் ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி ஹாமில்டன் மஸகட்சா இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், இரண்டாவது விக்கெட்டிற்கு 76 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அணியின் வெற்றியை உறுதிசெய்தனர். இதில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 41 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் மஸகட்ஸா தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.

இருப்பினும் மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கோஸ்வாமி 6 பவுண்டரிகளுடன் 48 ரன்களையும், பவன் நெகி 2 சிக்ஸர்களை விளாசியதுடன் 19 ரன்களை சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் அணி 14.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் கிரேட்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவு செய்து அசத்தியது. 

 

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

இந்நிலையில் இப்போட்டியில் குஜராத் அணிக்காக விளையாடி வரும் முன்னாள் வீரர் முகமது கைஃப் பவுண்டரி எல்லையில் பிடித்த கேட்ச் ஒன்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதன்படி, அதிரடியாக விளையாடி வந்த ஹாமில்டன் மஸகட்ஸா 41 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சிக்ஸர் அடிக்க முயற்சித்து தூக்கி அடிக்க, அதனை பவுண்டரி எல்லையில் சரியாக கணித்த முகமது கைஃப் அபாரமான கேட்ச்சை பிடித்து அசத்தினார். இந்நிலையில் இக்காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News