சில முடிவுகள் எனது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டவை - முகமது ரிஸ்வான்!
பாகிஸ்தான் அணியின் நட்சத்திர பேட்டர்களில் ஒருவராக திகழந்தவர் ஃபகர் ஸமான். பாகிஸ்தான் அணிக்காக கடந்த 2017ஆம் ஆண்டு அறிமுகமான இவர், இதுவரை 82 ஒருநாள் போட்டிகளிலும், 92 டி20 போட்டிகளிலும், 4 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.
இதில் மொத்தமாக 11 சதங்கள் மற்றும் 29 அரைசதங்களை பதிவுசெய்து அசத்தியுள்ள இவர், 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட ரன்களையும் சேர்த்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மத்திய ஒப்பந்தப் பட்டியலில் இருந்து ஃபகர் ஸமான் நீக்கப்பட்டடார். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் உடற்தகுதி தேர்வில் ஃபகர் ஸமான் தோலியடைந்ததன் காரணமாகவே அவர் ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இதனையடுத்து பாகிஸ்தான் அணியானது அடுத்ததாக ஆஸ்திரேலியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இந்நிலையில் இத்தொடர்களுக்கான பாகிஸ்தான் அணியின் சமீபத்தில் அறிவிக்கப்பட்டதுடன், அணியின் புதிய கேப்டனாக முகமது ரிஸ்வானும், துணைக்கேப்டனாக சல்மான் அலி ஆகாவும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்திருந்தது.
இதில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் பாபர் ஆசாம், நசீம் ஷா, ஷாஹீன் அஃப்ரிடி ஆகியோர் இடம்பிடித்துள்ள நிலையில், ஜிம்பாப்வே தொடரில் அவர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த தொடர்களுக்கான பாகிஸ்தான் அணியில் ஃபகர் ஸமானுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்நிலையில் ஃபகர் ஸமான் அணியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து அணியின் புதிய கேப்டன் முகமது ரிஸ்வான் தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள ரிஸ்வாஸ், “ஃபக்கர் ஸமான் ஆட்டத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தைப் பற்றி எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை, அவர் எந்த சூழ்நிலையிலும் தனித்து நின்று விளையாடக்கூடிய ஒரு செல்வாக்கு மிக்க வீரர். சில முடிவுகள் எனது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டவையாக இருந்தாலும், அவர் திரும்புவதற்கான சாத்தியக்கூறுகளை நாங்கள் விவாதித்து வருகிறோம். மேலும் இந்த விவகாரம் விரைவில் தீர்க்கப்படும் என்று நம்புகிறோம்”என்று தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா தொடருக்கான பாகிஸ்தான் ஒருநாள் அணி: அமீர் ஜமால், அப்துல்லா ஷஃபீக், அராபத் மின்ஹாஸ், பாபர் ஆசம், பைசல் அக்ரம், ஹாரிஸ் ரவூஃப், ஹசீபுல்லா, கம்ரான் குலாம், முகமது ஹஸ்னைன், முகமது ரிஸ்வான், முகமது இர்ஃபான் கான், நசீம் ஷா, சைம் அயூப், சல்மான் அலி ஆகா, ஷாஹீன் ஷா அஃப்ரிடி
ஆஸ்திரேலிய தொடருக்கான பாகிஸ்தான் டி20 அணி: அராபத் மின்ஹாஸ், பாபர் ஆசம், ஹாரிஸ் ரவுஃப், ஹசீபுல்லா, ஜஹந்தத் கான், முகமது அப்பாஸ் அஃப்ரிடி, முகமது ரிஸ்வான், முகமது இர்பான் கான், நசீம் ஷா, உமைர் பின் யூசுப், சாஹிப்ஜாதா ஃபர்ஹான், சல்மான் அலி ஆகா, ஷஹீன் ஷா அஃப்ரிடி, சுஃப்யான் முகிம், உஸ்மான் கான்.
ஜிம்பாப்வே தொடருக்கான் பாகிஸ்தான் ஒருநாள் அணி: அமீர் ஜமால், அப்துல்லா ஷஃபீக், அப்ரார் அகமது, அகமது டேனியல், பைசல் அக்ரம், ஹாரிஸ் ரவுஃப், ஹசீபுல்லா, கம்ரான் குலாம், முகமது ஹஸ்னைன், முகமது ரிஸ்வான், முகமது இர்பான் கான், சைம் அயூப், சல்மான் அலி ஆகா, ஷாநவாஸ் தஹானி, தயப் தாஹிர்.
Also Read: Funding To Save Test Cricket
ஜிம்பாப்வே தொடருக்கான பாகிஸ்தான் டி20 அணி: அகமது டேனியல், அராபத் மின்ஹாஸ், ஹாரிஸ் ரவுஃப், ஹசீபுல்லா, ஜஹந்தத் கான், முகமது அப்பாஸ் அஃப்ரிடி, முகமது ஹஸ்னைன், முகமது இர்பான் கான், உமைர் பின் யூசுப், காசிம் அக்ரம், சாஹிப்சாதா ஃபர்ஹான், சல்மான் அலி ஆகா, சுஃப்யான் முகிம், தயப் தாஹிர், உஸ்மான் கான்.