ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக மும்பையில் நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் கிளன் மேக்ஸ்வெல் ஒட்டுமொத்த உலகத்தையும் வியந்து பார்க்கும் அளவுக்கு அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சாத்தியமான வெற்றியை பெற்றுக் கொடுத்தார். அந்த போட்டியில் 292 ரன்களை துரத்திய ஆஸ்திரேலியா முக்கிய வீரர்களின் விக்கெட்டுகளை இழந்து 91/7 என ஆரம்பத்திலேயே சரிந்ததால் கண்டிப்பாக தோல்வியை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

Advertisement

ஆனால் அப்போது கேப்டன் பட் கம்மின்ஸ் உதவியுடன் நங்கூரமாக விளையாடிய மேக்ஸ்வெல் நேரம் செல்ல செல்ல அதிரடியாக விளையாடி விரைவாக ரன்களை சேர்த்தார். இருப்பினும் நீண்ட நேரம் விளையாடியதால் காயத்தை சந்தித்த அவர் அதையும் பொருட்படுத்தாமல் முதலுதவிகளை எடுத்துக்கொண்டு 21 பவுண்டரி 10 சிக்ஸருடன் ஒருநாள் மற்றும் உலகக் கோப்பையில் சேசிங் செய்கையில் இரட்டை சதமடித்த முதல் வீரர் என்ற சாதனையுடன் 201 குவித்து வெற்றி பெற வைத்தார்.

Advertisement

அன்றைய நாளில் வெளிப்படுத்திய பேட்டிங்க்கு மேக்ஸ்வெல்க்கு எதிராக யாருமே பந்து வீச முடியாது என்று ரசிகர்கள் வியப்பை வெளிப்படுத்தினர். இந்நிலையில் இந்த உலகக் கோப்பையில் இந்தியாவைச் சேர்ந்த நட்சத்திர பவுலர் முகமது ஷமி அனைத்து பேட்ஸ்மேன்களுக்கும் சவாலை ஏற்படுத்தக்கூடிய திறமையை கொண்டிருப்பதாக மேக்ஸ்வெல் பாராட்டியுள்ளார். குறிப்பாக பந்து பிட்ச்சாகி விக்கெட் கீப்பர் கைக்கு செல்லும் வரை சீம் பகுதி நேராக இருக்கும் அளவுக்கு உலகில் மற்ற பவுலர்களை காட்டிலும் துல்லியமாக வீசும் திறமையை கொண்ட ஷமியின் அவுட் ஸ்விங் பந்துகளை எதிர்கொள்வது மிகவும் கடினம் என்று மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார். 

இதுபற்றி பேசிய அவர், “முகமது ஷமியின் சீம் இந்த உலகிலேயே மிகவும் நேராக இருக்கும் அம்சங்களில் ஒன்றாகும். சொல்லப்போனால் கார்பெண்டர் கூட அது போன்ற நேரான கோணத்தை தங்களுடைய பொருள்களில் பெறுவதற்கு விரும்புவார்கள். ஷமி புதிய பந்தில் மிகவும் நன்றாக செயல்படுகிறார். பும்ரா மற்றும் சிராஜ் ஆகியோர் விக்கெட்டுகளை எடுத்தாலும் அவர் எதிரணிகளை அட்டாக் செய்ய முயற்சிப்பவர். குறிப்பாக அவருடைய தாமதமான ஸ்விங் எதிர்கொள்வதற்கு மிகவும் கடினமாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.

முன்னதாக இந்த தொடரில் முதல் 4 போட்டிகளில் பெஞ்சில் அமர்ந்திருந்த ஷமி அதன் பின் விளையாடிய 4 போட்டிகளில் 16 விக்கெட்டுகளை எடுத்து நியூசிலாந்து, இங்கிலாந்து, இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா பெரிய வெற்றிகளை பெறுவதற்கு முக்கிய பங்காற்றி வருகிறார். குறிப்பாக புதிய பந்தை ஸ்விங் செய்து எதிரணி பேட்ஸ்மேன்களை தெறிக்க விடும் அவர் உலகக்கோப்பையில் அதிக விக்கெட்களை எடுத்த இந்திய வீரராகவும் சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News