CT2025: முகமது சிராஜை தேர்வு செய்யாதது குறித்து விளக்கமளித்த ரோஹித் சர்மா!

Updated: Sun, Jan 19 2025 09:28 IST
Image Source: Google

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி மார்ச் 9ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. புள்ளிப்பட்டியளின் டாப் 8 இடங்களைப் பிடிக்கும் அணிகள் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தவுள்ளதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மாத்தியில் அதிகரித்துள்ளன. 

இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் இந்திய அணி நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டது. இதில் அணியின் கேப்டனாக ரோஹித் சரமா நீடிக்கும் நிலையில், அணியின் துணைக்கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கொண்டு காயத்தில் இருந்து மீண்டுள்ள குல்தீப் யாதவ், முகமது ஷமி ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதசமயம் காயத்தால் அவதிப்பட்டு வரும் ஜஸ்பிரித் பும்ராவுக்கும் இந்த அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

அதேசமயம் இந்த அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சன், முகமது சிராஜ், வருண் சக்ரவர்த்தி மற்றும் கருண் நாயர் உள்ளிட்ட வீரர்கள் தேர்வு செய்யப்படவில்லை. இதில் சஞ்சு சாம்சன் மற்றும் சிராஜ் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படாதது பெரும் விமர்சனங்களுக்கு வழிவகுத்துள்ளது. ஏனெனில் சஞ்சு தனது கடைசி ஒருநாள் போட்டியில் சதமடித்தும், சிராஜ் கடந்த இரண்டு ஆண்டுகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் சிராஜின் நீக்கம் குறித்து பேசிய இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, “ஜஸ்பிரித் பும்ரா விளையாடுவாரா இல்லையா என்பது எங்களுக்குத் தெரியவில்லை. எனவே, புதிய பந்தையும் பழைய பந்தையும் கொண்டு பந்து வீசக்கூடிய ஒருவரை தேர்வுசெய்ய நாங்கள் விரும்பினோம். அதனால்தான், அர்ஷ்தீப் சிங்கிறு நாங்கள் வாய்ப்பு கொடுத்துள்ளோம். அதேசமயம் சிராஜ் புதிய பந்தில் மட்டும் சிறந்த செயல்திறனைக் கொண்டுள்ளார். 

இதனால் முகமது சிராஜின் திறன் சற்று குறைவதாக நாங்கள் உணர்கிறோம். அவர் தனது வாய்ப்பை தவறவிட்டது முற்றிலும் துரதிர்ஷ்டவசமானது. மேலும் அர்ஷ்தீப் சிங் அதிக அளவிலான ஒருநாள் போட்டிகளில் விளையாடவில்லை. ஆனால், அவர் நீண்ட காலமாக டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவரால் அழுத்தமான சூழல்களில் சிறப்பாக பந்துவீச முடியும் என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும்” என்று தெரிவித்துள்ளார். 

Also Read: Funding To Save Test Cricket

இங்கிலாந்து & சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ஹார்டிக் பாண்டியா, அக்ஸர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷித் ராணா (இங்கிலாந்து தொடரில் மட்டும்).

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை