வங்கதேச டெஸ்ட் தொடரில் இருந்தும் முகமது ஷமி விலகல்?

Updated: Thu, Aug 22 2024 16:19 IST
Image Source: Google

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள வங்கதேச அணியானது இரண்டு டெஸ்ட் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இந்நிலையில் வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் முகமது ஷமி கம்பேக் கொடுப்பார் என தகவல்கள் வெளியாகின. ஏனெனில், கடந்தாண்டு இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் போது காயமடைந்த முகமது ஷமி அதன்பின் நடைபெற்ற எந்தவொரு சர்வதேச கிரிக்கெட் தொடர்களிலும் பங்கேற்காமல் இருந்தார். 

அதுமட்டுமின்றி தனது காயத்திற்காக அறுவை சிகிச்சை மேற்கொண்டிருந்த முகமது ஷமி நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரி 17ஆவது சீசனிலிருந்தும் விலகியதுடன், நடைபெற்றுவரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலும் இந்திய அணியில் இடம்பிடிக்க முடியாமல் தடுமாறியுள்ளார். இந்நிலையில் தான் தற்சமயம் காயத்திலிருந்து மீண்டுள்ள முகமது ஷமி வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கம்பேக் கொடுப்பார் என்று தகவல்கள் வெளியாகின.

தற்போது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் உள்ள ஷமி உடல் நலம் தேறி வருகிறார். மேலும் அவர் தனது உடற்தகுதியில் ஊக்கமளிக்கும் அறிகுறிகள் இருந்தபோதிலும், அணி நிர்வாகம் எச்சரிக்கையுடன் செயல்படுவதாக கூறப்படுகிறது. ஏனெனில் இந்த ஆண்டு இறுதியில் தொடங்கும் பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடருக்குள் அவர் முழு உடற்தகுதியுடன் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பிசிசிஐ தொடர்ந்து அவரை தீவிரமாக கண்காணித்து வருகிறது. 

இந்நிலையில், முகமது ஷமி தேசிய அணிக்கு திரும்ப எந்த அவசரமும் இல்லை என்று, அவர் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு தயாராகும் வகையில் தனது பணிச்சுமையை படிப்படியாக அதிகரிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார் என்றும் பிசிசிஐ தரப்பில் கூறப்படுகிறது. இதனால் அவர் வங்கதேச டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடிக்க மாட்டார் என்ற தகவல்கள் வெளி வந்துள்ளனர். மேற்கொண்டு அவர் அக்டோபர் 11ஆம் தேதி நடைபெறும் ரஞ்சி கோப்பையின் முதல் போட்டியில் ஷமி மீண்டும் களமிறங்கவுள்ளார்.

இதன் மூலம் அவர் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடிக்க வழி வகுக்கும். மேலும் அவர் நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்டில் விளையாடவும் அதிக வாய்ப்பு உள்ளது. இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அக்டோபர் 16ஆம் தேதி தொடங்கும், நிலையில் முகமது ஷமி அத்தொடரில் தான் அணிக்கு திரும்புவார் என்று கூறப்படுகிறது.

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

இத்தொடருக்கு முன், வங்கதேசத்துக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விளையாடுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தற்சமயம் முகமது ஷமியும் வங்கதேச தொடரில் விளையாடமாட்டர் என்ற தகவலால் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை