விராட் கோலி - ரோஹித் சர்மா யார் சிறந்தவர்? - பதிலளித்த முகமது ஷமி!
உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களில் விராட் கோலியும், இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மாவும் இடம்பிடிப்பார்கள் என்பதை யாராலும் மறுக்க முடியாது. இவர்கள் இருவரும் கடந்த பல ஆண்டுகளாக இந்திய அணிக்காக சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். மேலும் இருவரும் தான் இந்திய அணியின் பேட்டிங் தூண்களாக பார்க்கப்படுகின்றனர்.
ஏனெனில் விராட் கோலி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 50 சதங்களை விளாசியதுடன், ஒட்டுமொத்தமாக அதிக சர்வதேச ரன்களை குவித்த வீரர்கள் வரிசையிலும் அவர் இடம்பிடித்துள்ளார். அதேசமயம் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக முறை இரட்டை சதங்களை விளாசிய வீரர் என்ற சாதனையுடன், தனிநபர் அதிகபட்ச ரன்னையும் பதிவுசெய்து சாதனை படைத்துள்ளார்.
இந்நிலையில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரில் யார் சிறந்த வீரர் என்ற கேள்விக்கான பதிலை இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், "விராட் கோலி உலகின் சிறந்த பேட்ஸ்மேன். விராட் கோலி இதுவரை பல சாதனைகளை முறியடித்துள்ளார். அதனால் நான் விராட் கோலி தான் சிறந்தவர் என நினைக்கிறேன். அதேசமயம் ரோஹித் சர்மா உலகின் மிகவும் ஆபத்தான பேட்ஸ்மேன் என்று நான் நினைக்கிறேன்" என கூறியுள்ளார்.
இந்திய அணியின் நட்சத்தி வேகப்பந்து வீச்சாலர் முகமது ஷமி. இந்திய அணி தற்போது இங்கிலாந்து அணிக்கெதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறடு. இத்தொடரில் காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி அணியில் இடம்பிடிக்கவில்லை. மேலும் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் தான் முகமது ஷமி மீண்டும் விளையாட தொடங்குவார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.