இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. இவர் கடந்தாண்டு இந்தியாவில் நடந்து முடிந்த ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் போது காயமடைந்தார். இதன் காரணமாக அவர் எந்தவொரு சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் மற்றும் தொடர்களில் பங்கேற்காமல் இருந்து வருகிறார். அதுமட்டுமின்றி தனது காயத்திற்காக அறுவை சிகிச்சை மேற்கொண்டிருந்த முகமது ஷமி நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரி 17ஆவது சீசனிலிருந்தும் விலகியதுடன், நடைபெற்றுவரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலும் இந்திய அணியில் இடம்பிடிக்க முடியாமல் தடுமாறியுள்ளார்.

Advertisement

இந்நிலையில் தான் தற்சமயம் காயத்திலிருந்து மீண்டுள்ள முகமது ஷமி வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கம்பேக் கொடுப்பார் என்று தகவல்கள் வெளியாகின. தற்போது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் உள்ள ஷமி உடல் நலம் தேறி வருகிறார். மேலும் அவர் தனது உடற்தகுதியில் ஊக்கமளிக்கும் அறிகுறிகள் இருந்தபோதிலும், அணி நிர்வாகம் எச்சரிக்கையுடன் செயல்படுவதாக கூறப்படுகிறது. ஏனெனில் இந்த ஆண்டு இறுதியில் தொடங்கும் பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடருக்குள் அவர் முழு உடற்தகுதியுடன் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பிசிசிஐ தொடர்ந்து அவரை தீவிரமாக கண்காணித்து வருகிறது. 

Advertisement

இதனால் அவர் வங்கதேச டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடிக்க மாட்டார் என்ற தகவல்கள் வெளி வந்துள்ளனர். மேற்கொண்டு அவர் அக்டோபர் 11ஆம் தேதி நடைபெறும் ரஞ்சி கோப்பையின் முதல் போட்டியில் ஷமி மீண்டும் களமிறங்கவுள்ளார். இதன் மூலம் அவர் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடிக்க வழி வகுக்கும். மேலும் அவர் நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்டில் விளையாடவும் அதிக வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இந்நிலையில் முகமது ஷமி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனக்குப் பிடித்த மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர் யார் என்பது குறித்து பேசியுள்ளார். அதன்படி இதுகுறித்து பேசிய அவர், “எனக்கு பிடித்த வேகப்பந்து வீச்சாளர்கள் என்றால் நிறைய பேரை சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால், ஒரு குறிப்பிட்ட பேரை மட்டுமே சொல்ல வேண்டும் என்றால் எனக்கு தென் ஆப்பிரிக்காவின் டேல் ஸ்டெய்ன் மற்றும் பாகிஸ்தானின் வக்கார் யூனிஸ் இருவரையும் தான் பிடிக்கும்” என்று தெரிவித்துள்ளார். இவரது இந்த கருத்தானது சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது. 

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழும் முகமது ஷமி, இந்திய அணிக்காக கடந்த 2013ஆம் ஆண்டு அறிமுகமாகி இதுவரை 64 டெஸ்ட் போட்டிகளில் 229 விக்கெட்டுகளையும், 101 ஒருநாள் போட்டிகளில் 195 விக்கெட்டுகளையும் மற்றும் மேலும் 23 டி20 போட்டிகளில் 24 விக்கெட்டுகளையும் என மூன்று வகையான கிரிகெட்டிலும் இந்திய அணியின் மிகச்சிறந்த வேகப்பந்துவீச்சாளராக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News