விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்பக நடைபெற்று வரும் நிலையில், இதில் நேற்று நடைபெற்ற லீக் போட்டி ஒன்றில் பெங்கால் மற்றும் மஹாராஷ்டிரா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற மஹாராஷ்டிரா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய பெங்கால் அணியில் கேப்டன் சுதிப் காமி 99 ரன்களில் விக்கெட்டை இழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 

Advertisement

அதேசமயம் சுதிப் சாட்டர்ஜி 47 ரன்களையும், இறுதியில் அதிரடி காட்டிய முகமது ஷமி 42 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் பெங்கால் 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 269 ரன்களைச் சேர்த்தது, மஹாராஷ்டிரா அணி தரப்பில் ஆர்யன் பாண்டே, ஆவேஷ் கான் தல 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய மத்திய பிரதேச அணிக்கு தொடக்கம் சிறப்பானதாக அமையவில்லை.

Advertisement

அணியின் தொடக்க வீரர்கள் ஹர்ஷ் கௌலி, ஹிமன்ஷு மந்த்ரி ஆகியோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த ஷுபம் சர்மா மற்றும் கேப்டன் ராஜத் பட்டிதார் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் இருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட்டிற்கு 185 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். பின் சதத்தை நெருங்கிய் ஷுபம் சர்மா 99 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.

அடுத்து களமிறங்கிய ஷுப்ரன்ஷு சேனாபதி 25 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தார். இருப்பினும் மறுபக்கம் அதிரடியாக விளையாடி வந்த ராஜத் பட்டிதார் சதமடித்து அசத்தியதுடன், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 138 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் மஹாராஷ்டிரா அணி 46.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்கால் அணியை வீழ்த்தி வெற்றி பெற்று அசத்தியது. 

இந்நிலையில் இப்போட்டியில் பெங்கால் அணி தோல்வியடைந்திருந்தாலும், அந்த அணியின் நட்சத்திர வீரர் முகமது ஷமி ரசிகர்களில் கவனத்தை ஈர்த்துள்ளார். அதன்படி இப்போட்டியில் முகமது ஷமி பேட்டிங்கில் 34 பந்துகளை எதிர்கொண்ட நிலையில் அதில் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 42 ரன்களைக் குவித்து அசத்தினார். இந்நிலையில் முகமது ஷமி பேட்டிங்கில் அசத்திய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

முன்னதாக கடந்த 2023ஆம் ஆண்டு ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் போது காயமடைந்த முகமது ஷமி அதற்காக அறுவை சிகிச்சை மேற்கொண்டிருந்தார். இதன் காரணமாக கிட்டத்திட்ட ஓராண்டுக்கு மேல் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாமல் இருந்து வந்த நிலையில், கடந்தாண்டு ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் மூலம் மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளார். இதனால் அவர் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இடம்பெறுவார் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்திருந்தது. 

Advertisement

ஆனால் தேசிய கிரிக்கெட் அகாடமியின் மருத்துவ பரிசோதனையில் முகமது ஷமி தோல்வியடைந்ததை அடுத்து, பார்டர் கவாஸ்கர் தொடருக்கான இந்திய அணியில் அவரால் இடம்பிடிக்க முடியவில்லை. இருப்பினும் அவர் உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதனால் எதிர்வரும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் முகமது ஷமி சேர்க்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News