AUS vs PAK: டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!

Updated: Sun, Dec 03 2023 12:00 IST
AUS vs PAK: டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு! (Image Source: Google)

இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 6ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனைப் படைத்தது. இதையடுத்து அந்த அணி இந்திய அணிக்கெதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதையடுத்து ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. 

இத்தொடரானது டிசம்பர் 14ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இதற்கிடையில் இத்தொடருக்கான ஷான் மசூத் தலைமையிலான பாகிஸ்தான் அணி நேற்று முந்தினம் ஆஸ்திரேலியாவிற்கு சென்று பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இத்தொடரின் முதல் போட்டிக்கான 14 பேர் அடங்கிய ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் மார்ஷ், மிட்செல் ஸ்டார்க், நாதன் லையன் போன்ற நட்சத்திர வீரர்கள் அணியில் இடம்பிடித்துள்ளார். அதேசமயம் அறிமுக வீரரான லான்ஸ் மோரிஸுக்கு இந்த தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி: பாட் கம்மின்ஸ் (கே), ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுஷாக்னே, நாதன் லையன், மிட்செல் மார்ஷ், லான்ஸ் மோரிஸ், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், டேவிட் வார்னர்.

 

 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை