Namibia vs England Dream11 Prediction, T20 World Cup 2024: ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரி 9ஆவது பதிப்பு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் 7 அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இந்நிலையில் இத்தொடரின் சூப்பர் 8 சுற்றுக்கான மீதமிருக்கும் ஒரு இடத்தில் இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவிவருகிறது. இந்நிலையில் இன்று நடைபெறும் 34ஆவது லீக் ஆட்டத்தில் நமீபியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இப்போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெறுவதுடன், ஸ்காட்லாந்து - ஆஸ்திரேலிய போட்டியின் முடிவை வைத்தே சூப்பர் 8 சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்குமால் இல்லையா என்பது தெரியவரும். இதன் காரணமாக இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

Advertisement

NAM vs ENG: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - நமீபியா vs இங்கிலாந்து
  • இடம் - சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானம், ஆண்டிகுவா
  • நேரம் - ஜூன் 15, இரவு 10.30 மணி
Advertisement

NAM vs ENG Pitch Report

ஆண்டிகுவாவில் அமைந்துள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானமானது வரலாற்றில் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஒன்றாக கருதப்படுகிறது. இங்கு மித வேகத்தில் பந்துவீசும் பந்துவீச்சாளர்கள் மற்றும் சுழற்பந்து வீச்சாளர்கள் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். மேலும் இந்த மைதானத்தின் சராசரி ஸ்கோரானது 125 ரன்களாக இருந்தாலும், இங்கு முதலில் பேட்டிங் செய்யும் அணிகளே அதிகளவு வெற்றியை ஈட்டியுள்ளது. இதனால் டாஸ் வெல்லும் கேப்டன் பேட்டிங்கைத் தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம். 

NAM vs ENG T20I Head to Head

  • மோதிய போட்டிகள் - 00
  • இங்கிலாந்து - 00
  • நமீபியா - 00

NAM vs ENG: Where to Watch?

Advertisement

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரின் அனைத்து போட்டிகளையும் இந்தியாவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க ஆசைப்படும் ரசிகர்கள் டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் இத்தொடரை நேரலையில் காணலாம். 

Namibia vs England Probable Playing XI

நமீபியா உத்தேச லெவன்: மைக்கேல் வான் லிங்கன், நிக்கோ டெவின், ஜான் ஃப்ரீலிங், ஜெர்ஹார்ட் எராஸ்மஸ் (கேப்டன்), ஜேஜே ஸ்மிட், ஜேன் கிரீன், டேவிட் வைஸ், ரூபன் ட்ரம்பெல்மேன், பெர்னாடெட் ஸ்கோல்ட்ஸ், பென் ஷிகோங்கோ, ஜாக் பிரஸ்ஸல்.

Advertisement

இங்கிலாந்து உத்தேச லெவன்: பில் சால்ட், ஜோஸ் பட்லர் (கேப்டன்), வில் ஜாக், ஜானி பேர்ஸ்டோ, மொயின் அலி, ஹாரி புரூக், லியாம் லிவிங்ஸ்டோன், கிறிஸ் ஜோர்டான், ஜோஃப்ரா ஆர்ச்சர், அடில் ரஷித், மார்க் வுட்.

NAM vs ENG T20 World Cup Dream11 Team

  • விக்கெட் கீப்பர்கள் - ஜோஸ் பட்லர் (துணை கேப்டன்), பில் சால்ட்
  • பேட்ஸ்மேன் - வில் ஜாக்ஸ்
  • ஆல்-ரவுண்டர்கள் - டேவிட் வைஸ், மொயீன் அலி (கேப்டன்), ஹெகார்ட் எராஸ்மஸ்
  • பந்துவீச்சாளர்கள் - மார்க் வுட், அடில் ரஷித், ஜோஃப்ரா ஆர்ச்சர், கிறிஸ் ஜோர்டான், ரூபன் ட்ரம்பெல்மேன்.

NAM vs ENG Dream11 Prediction, T20 World Cup 2024, Today Match NAM vs ENG, NAM vs ENG Dream11 Team, Fantasy  Cricket Tips, NAM vs ENG Pitch Report, Today  Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Namibia vs England

Advertisement

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News