Namibia vs Oman Dream11 Prediction, T20 World Cup 2024: ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 9ஆவது ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரானது இன்று தொடங்கியது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாளுக்கு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இத்தொடரில் நாளை நடைபெறும் மூன்றாவது லீக் ஆட்டத்தில் குரூப் பி பிரிவில் இடம்பிடித்துள்ள நமீபியா மற்றும் ஓமன் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. சர்வதேச கிரிக்கெட்டில் இரு அணிகளும் கத்துக்குட்டி அணிகளாக பார்க்கப்பட்டாலும் நிச்சயம் சுவராஸ்யத்திற்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. 

Advertisement

NAM vs OMN: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - நமீபியா vs ஓமன்
  • இடம் - கெனிங்ஸ்டன் ஓவல், பார்படாஸ்
  • நேரம் - காலை 6 மணி (இந்திய நேரப்படி)
Advertisement

NAM vs OMN Pitch Report

பார்படாஸில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் இதுவரை மொத்தம் 42 டி20 போட்டிகள் நடந்துள்ளன. அதில் முதலில் பேட்டிங் செய்த அணி 28 போட்டிகளில், இரண்டாவது பேட்டிங் செய்த அணி 13 முறையும் வெற்றிபெற்றுள்ளன. இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸ் சராசரி ஸ்கோரானது 138 ரன்களாக இருந்தாலும், இந்த மைதானத்தில் பதிவுசெய்யப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக 224 ரன்கள் உள்ளது. இதனால் நிச்சயம் இப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. 

NAM vs OMN T20I Head to Head

  • மோதிய போட்டிகள் - 06
  • நமீபியா - 04
  • ஓமன் - 02

NAM vs OMN: Where to Watch?

Advertisement

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரின் அனைத்து போட்டிகளையும் இந்தியாவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க ஆசைப்படும் ரசிகர்கள் டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் இத்தொடரை நேரலையில் காணலாம். 

Namibia vs Oman Probable Playing XI

நமீபியா: நிகோலஸ் டேவின், ஜீன்-பியர் கோட்ஸே, மைக்கேல் வான் லிங்கன், ஜெர்ஹார்ட் எராஸ்மஸ் (கேப்டன்), டேவிட் வைஸ், ஜேஜே ஸ்மிட், ஜான் ஃபிரைலின்க், ஜேன் கிரீன், ரூபன் ட்ரம்பெல்மேன், பெர்னார்ட் ஷால்ட்ஸ், பென் ஷிகோங்கோ

Advertisement

ஓமன்: காஷ்யப் பிரஜாபதி, நசீம் குஷி, அகிப் இலியாஸ் (கேப்டன்), ஜீஷன் மக்சூத், பிரதிக் அதவலே, அயன் கான், காலித் கைல், ஷகீல் அகமது, ரஃபியுல்லா, ஃபயாஸ் பட், பிலால் கான்.

NAM vs OMN T20I, Dream11 Team

  • விக்கெட் கீப்பர்கள் - ஜீன்-பியர் கோட்ஸே, பிரதிக் அதாவாலே
  • பேட்ஸ்மேன்கள் - காலித் கெல், காஷ்யப் குமார் பிரஜாபதி, மாலன் க்ரூகர்
  • ஆல்-ரவுண்டர் - டேவிட் வைஸ் (கேப்டன்), அகிப் இலியாஸ் (துணை கேப்டன்), ஜெர்ஹார்ட் எராஸ்மஸ், ஜீஷன் மக்சூத்
  • பந்துவீச்சாளர்கள் - பெர்னாண்டே ஷால்ட்ஸ், பிலால் கான்.

NAM vs OMN Dream11 Prediction, T20 World Cup 2024, Today Match NAM vs OMN, NAM vs OMN Dream11 Team, Fantasy Cricket Tips, NAM vs OMN Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Namibia vs Oman

Advertisement

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News