Namibia vs Scotland Dream11 Prediction Match 12, ICC T20 World Cup 2024: ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நாளை (இன்று நள்ளிரவு) நடைபெறும் 12ஆவது லீக் ஆட்டத்தில் குரூப் பி பிரிவில் இடம்பிடித்துள்ள நமீபியா அணியை எதிர்த்து ஸ்காட்லாந்து அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இதில் நமீபியா அணியானது தங்களது முதல் லீக் போட்டியில் சூப்பர் ஓவர் முறையில் வெற்றி பெற்ற உத்வேகத்தில் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. அதேசமயம் ஸ்காட்லாந்து அணியும் முதல் போட்டியில் அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்தியுள்ளதால், நிச்சயம் இப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. 

Advertisement

NAM vs SCO: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - நமீபியா vs ஸ்காட்லாந்து
  • இடம் - கெனிங்ஸ்டன் ஓவல், பார்படாஸ்
  • நேரம் - நள்ளிரவு 12.30 மணி (இந்திய நேரப்படி)
Advertisement

NAM vs SCO Pitch Report

பார்படாஸில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் இதுவரை மொத்தம் 42 டி20 போட்டிகள் நடந்துள்ளன. அதில் முதலில் பேட்டிங் செய்த அணி 29 போட்டிகளில், இரண்டாவது பேட்டிங் செய்த அணி 14 முறையும் வெற்றிபெற்றுள்ளன. இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸ் சராசரி ஸ்கோரானது 138 ரன்களாக இருந்தாலும், இந்த மைதானத்தில் பதிவுசெய்யப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக 224 ரன்கள் உள்ளது. இதனால் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்வது வெற்றிக்கு உதவலாம். 

NAM vs SCO T20I Head to Head

  • மோதிய போட்டிகள் -03
  • நமீபியா - 03
  • ஸ்காட்லாந்து - 00

NAM vs SCO: Where to Watch?

Advertisement

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரின் அனைத்து போட்டிகளையும் இந்தியாவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க ஆசைப்படும் ரசிகர்கள் டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் இத்தொடரை நேரலையில் காணலாம். 

Namibia vs Scotland Probable Playing XI

நமீபியா: மைக்கேல் பெயின் லிங்கன், நிகோ டெவின், ஜான் ஃப்ரீலிங், ஜெர்ஹார்ட் எராஸ்மஸ் (கேப்டன்), ஜேஜே ஸ்மி, டேவிட் வைஸ், ஜேன் கிரீன், மாலன் க்ரூகர், ரூபன் ட்ரம்பெல்மேன், பெர்னார்ட் ஷால்ட்ஸ், டாங்கேனி லுங்காமேனி.

Advertisement

ஸ்காட்லாந்து: ஜார்ஜ் முன்ஸி, மைக்கேல் ஜோன்ஸ், பிராண்டன் மெக்முல்லன், ரிச்சி பெரிங்டன் (கேப்டன்), மேத்யூ கிராஸ், மைக்கேல் லீஸ்க், கிறிஸ் க்ரீவ்ஸ், மார்க் வாட், கிறிஸ் சோல், பிராட்லி வீல், பிராட்லி கியூரி.

NAM vs SCO T20 World Cup Dream11 Team

  • விக்கெட் கீப்பர் - மேத்யூ கிராஸ்
  • பேட்ஸ்மேன்கள் - ஜார்ஜ் முன்சி (துணை கேப்டன்), மைக்கேல் ஜோன்ஸ், ரிச்சி பெரிங்டன்
  • ஆல்-ரவுண்டர்கள் - கெர்ஹார்ட் எராஸ்மஸ், டேவிட் வைஸ் (கேப்டன்), மைக்கேல் லீஸ்க், ஜான் ஃப்ரீலிங்
  • பந்துவீச்சாளர்கள் - ரூபன் ட்ரம்பெல்மேன், பெர்னார்ட் ஷால்ட்ஸ், கிறிஸ் சோல்.

NAM vs SCO Dream11 Prediction, T20 World Cup 2024, Today Match NAM vs SCO, NAM vs SCO Dream11 Team, Fantasy Cricket Tips, NAM vs SCO Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between United States of Namibia vs Scotland

Advertisement

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News