தென் ஆப்பிரிக்க அணியானது தற்போது அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த டி20 தொடரின் முடிவில் இரு அணிகளும் தலா 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்துள்ள நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.

Advertisement

இதில் நடந்து முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்திய நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியானது பேட்டிங் செய்வதாக அறிவித்து விளையாடி வருகிறது. இதனைத்தொடர்ந்து வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள தென் ஆப்பிரிக்க அணியானது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.

Advertisement

அதன்படி வங்கதேசம் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி அக்டோபர் 21ஆம் தேதி தாக்காவிலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி அக்டோபர் 29ஆம் தேதி சட்டோகிராமிலும் நடைபெறவுள்ளது.  இந்நிலையில் வங்கதேச டெஸ்ட் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்துள்ளது. அதன்படி 15 பேர் அடங்கிய இந்த தென் ஆப்பிரிக்க அணியை டெம்பா பவுமா வழிநடத்தவுள்ளார். அதேசமயம் இத்தொடருக்கான தென் ஆப்பிரிக்க டெஸ்ட் அணியில் அறிமுக வீரரான மேத்யூ பிரிட்ஸ்கீக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

இதுதவிர சேனுரான் முத்துசாமிக்கும் மீண்டும் டெஸ்ட் அணியில் இடம் கிடைத்துள்ளது.  இதன்மூலம் கேசவ் மகாராஜ், டேன் பீட் ஆகியோருடன் மூன்றாவது சுழற்பந்து வீச்சாளராக சேனுரான் முத்துசாமி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுதவிரா டோனி டி ஸோர்ஸி, ஐடன் மார்க்ரம், டேவிட் பெட்டிங்ஹாம், காகிசோ ரபாடா, நந்த்ரே பர்கர், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், வியான் முல்டர் உள்ளிட்ட நட்சத்திர வீரர்களும் இந்த டெஸ்ட் அணியில் தங்களுடைய இடங்களை தக்கவைத்துள்ளனர். இந்நிலையில் இத்தொடருக்கு முன்னரே தென் ஆப்பிரிக்க அணியானது பின்னடைவை சந்தித்துள்ளது. 

அந்த அணியின் இளம் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் நந்த்ரே பர்க்கர் காயம் காரணமாக அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் வங்கதேச டெஸ்ட் தொடர்களில் இருந்து விலகியுள்ளதாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. மேற்கொண்டு நந்த்ரே பர்கருக்கான மாற்று வீரரை தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் கூடிய விரைவில் அறிவிக்கும் என்றும் அந்த அறிக்கையில் கூறியுள்ளது. காயம் காரணமாக நந்த்ரே பர்கர் ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளது தென் ஆப்பிரிக்க அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் அணி: டெம்பா பவுமா (கேப்டன்), டேவிட் பெடிங்ஹாம், மேத்யூ ப்ரீட்ஸ்கி, டோனி டி ஸோர்ஸி, கேசவ் மஹராஜ், ஐடன் மார்க்ரம், வியான் முல்டர், செனுரன் முத்துசாமி, டேன் பேட்டர்சன், டேன் பீட், காகிசோ ரபாடா, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ரியான் ரிக்கல்டன், கைல் வெர்ரைன்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News