நெதர்லாந்து, அமெரிக்கா மற்றும் கனடா அணிகள் முத்தரப்பு டி20 தொடர்களில் விளையாடி வருகின்றன. இத்தொடரில் இன்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் நெதர்லாந்து மற்றும் கனடா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற கனடா அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணியில் தொடக்க வீரர்கள் ஆரோன் ஜான்சன் 4 ரன்களிலும், தில்ப்ரீத் பஜ்வா 5 ரன்களிலும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ராயன் பதான் ரன்கள் ஏதுமின்றி முதல் பந்திலேயும், அடுத்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் மொவ்வா மற்றும் ஹர்ஷ் தாகர் ஆகியோரும் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர். 

Advertisement

இதனால் கனடா அணியானது 80 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனையடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் நிக்கோலஸ் கிர்டன் மற்றும் ரவீந்திரபால் சிங் ஆகியோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். இப்போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிக்கோலஸ் கிர்டன் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதுமட்டுமில்லாமல் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த நிக்கோலஸ் கிர்டன் 8 பவுண்டரிகளுடன் 69ரன்களைச் சேர்த்து அசத்தினார். 

Advertisement

அதேசமயம் மறுப்பக்கம்அவருக்கு துணையாக அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரவீந்திரபால் சிங் ஒரு பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 39 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதனூலம் கனடா அணியானது 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்களைச் சேர்த்தது. நெதர்லாந்து அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய கைல் கெலின் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய நெதர்லாந்து அணிக்கு மேக்ஸ் ஓடவுட் மற்றும் மைக்கேல் லெவிட் இணை தொடக்கம் கொடுத்தனர்.

இருவரும் இணைந்து தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி பவுண்டரியும், சிக்ஸர்களையும் பறக்கவிட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. மேற்கொண்டு இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 60 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், மேக்ஸ் ஓடவுட் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 23 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார். பின்னர் மைக்கெல் லெவிட்டுடன் இணைந்த விக்ரம்ஜித் சிங்கும் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினார். தொடர்ந்து அபார்மான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் தங்களது அரைசதங்களை பதிவுசெய்து அசத்தினர். 

பின்னர் 5 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 52 ரன்களைச் சேர்த்திருந்த விக்ரம்ஜித் சிங் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸும் 7 ரன்களுடனும், சாக் லயன் கேஷட், ரியான் கெலின் ஆகியோர் அடுத்தடுத்து ரன்கள் ஏதுமின்றியும் என நடையைக் கட்டினார்.  இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மைக்கேல் லெவிட் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 62 ரன்களைச் சேர்க்க, நெதர்லாந்து அணியும் 16 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் கனடா அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் நெதர்லாந்து அணி இந்த முத்தரப்பு தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News