நெதர்லாந்தில் அமெரிக்கா, கனடா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு டி20 தொடரானது நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற டி20 போட்டியில் அமெரிக்கா மற்றும் கனடா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற அமெரிக்க அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது. அதன்படி விளையாடிய அந்த அணிக்கு கேப்டன் மொனாங்க் படேல் - அறிமுக வீரர் சைதேஜா முக்கமல்ல இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர். 

Advertisement

பின்னர் 16 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மொனாங்க் படேல் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அதிரடியாக விளையாடி வந்த அறிமுக வீரர் சைதேஜா முக்கமல்ல அரைசதம் கடந்து அசத்தியதுடன், 8 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 52 ரன்களை எடுத்த நிலையில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அவரைத்தொடர்ந்து 21 ரன்களில் ஆண்ட்ரிஸ் கௌஸும், 5 ரன்களில் ஆரோன் ஜோன்ஸும் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த ஹர்மீத் சிங் - நிதீஷ் குமார் இணை ஓரளவு தக்குப்பிடித்ததுடன், அணியின் ஸ்கோஒரையும் உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். 

Advertisement

பின்னர் 24 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஹர்மீத் சிங் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து நிதீஷ் குமாரும் 14 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் ஷயான் ஜஹாங்கீர் 15 ரன்களும், வான் சால்விக் 15 ரன்களையும் சேர்க்க அமெரிக்க அணியானது 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்ததுடன் 168 ரன்களைச் சேர்த்தது. கனடா அணி தரப்பில் சாத் பின் ஸஃபர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய கனடா அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அதன்படி அந்த அணியின் ஆரோன் ஜான்சன், கன்வர்பால் தத்குர், நிக்கோலஸ் கிர்டன் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். 

இதனால் அந்த அணி 31 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் இணைந்த தில்பிரீத் பஜ்வா - ஸ்ரேயாஸ் மொவ்வா இணை பொறுப்புடன் விளையாடி அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினர். அதன்பின் இருவரும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் 60 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப்பும் அமைத்து அசத்தினர். இதில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த தில்பிரீத் பஜ்வா தனது அரைசதத்தையும் பதிவுசெய்து அசத்தினார். பின்னர் 6 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 56 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தில்பிரீத் பஜ்வா தனது விக்கெட்டை இழந்தார். 

அதேசமயம் மறுபக்கம் அரைசதத்தை நெருங்கிய ஸ்ரேயாஸ் மொவ்வா 37 ரன்களிலும், அடுத்து களமிறங்கிய ஹர்ஷ் தாகெர் 13 ரன்களுக்கும், திலன் ஹெய்லிகர் 20 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் கனடா அணியானது 7 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்களை மட்டுமே எடுத்தது. அமெரிக்க அணி தரப்பில் நோஸ்துஷ் கென்ஜிகே, ஷாட்லி வான் ஷால்க்விக், ஆரோன் ஜோன்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன்மூலம் அமெரிக்கா அணியானது 20 ரன்கள் வித்தியாசத்தில் கனடா அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News