NZ vs ENG: மூன்றாவது டெஸ்டில் இருந்து விலகிய டெவான் கான்வே!
இங்கிலாந்து அணி தற்சமயம் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இத்தொடரில் நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியானது 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 1-1 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலை பெற்றிருந்தது.
இதையடுத்து நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது வெலிங்டனில் நடைபெற்றது. இப்போட்டியிலும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணி 323 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. இப்போட்டியில் சதமடித்து அசத்திய ஹாரி புரூக் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது டிசம்பர் 14ஆம் தேதி முதல் ஹாமில்டனில் நடைபெற இருக்கிறது. இப்போட்டியிலும் இங்கிலாந்து அணி வெற்றிபெறும் பட்சத்தில் நியூசிலாந்தை வீழ்த்தும் பட்சத்தில் தொடரை முழுமையாக கைப்பற்றும். இதனால் நியூசிலாந்து அணி எப்படியாவது இப்போட்டியில் வெற்றிபெற்று தொடரை முழுமையாக இழப்பதில் இருந்து தடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.
இதனால் இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகிறது. இந்நிலையில் ஏற்கெனவே இத்தொடரை இழந்துள்ள நியூசிலாந்து அணிக்கு மேலும் ஒரு பின்னடைவானது ஏற்பட்டுள்ளது. அதன்படி, அந்த அணியின் நட்சத்திர வீரர் டெவான் கான்வே இப்போட்டியில் இருந்து விலகியுள்ளார். அதன்படி குழந்தை பிறப்பின் காரணமாக டெவான் கான்வே இப்போட்டியில் இருந்து விலகியுள்ளதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக இப்போட்டிக்கான நியூசிலாந்து அணியில் மார்க் சாப்மேன் சேர்க்கப்பட்டுள்ளார். இருப்பினும் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தொடர் நாயகன் விருதை வென்ற நிலையிலும், இத்தொடரில் இதுவரை வாய்ப்பு பெறாமல் இருந்து வருகிறார். தற்சமயம் டெவான் கான்வே இல்லாத நிலையில், அவரது இடத்தை வில் யங் நிரப்புவார் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Also Read: Funding To Save Test Cricket
நியூசிலாந்து டெஸ்ட் அணி: டாம் லாதம் (கே), டாம் ப்ளூன்டெல், மார்க் சாப்மேன், ஜேக்கப் டஃபி, மாட் ஹென்றி, டேரில் மிட்செல், வில் ஓ ரூர்க், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திர, மிட்செல் சான்ட்னர், நாதன் ஸ்மித், டிம் சவுத்தி, கேன் வில்லியம்சன், வில் யங்