இந்தியா - நியூசிலாந்து மோதிய இந்த போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற இதில் இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள்ல் 8 விக்கெட்கள் இழப்புக்கு 349 ரன்களை குவித்தது. இதன் பின்னர் விளையாடிய நியூசிலாந்து அணி 49.2 ஓவர்களில் 337 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நியூசிலாந்து அணி சார்பாக மைக்கேல் பிரேஸ்வெல் 78 பந்துகளில் 140 ரன்கள் அடித்து அசத்தினார்.

Advertisement

இந்த போட்டியில் நியூசிலாந்து அணி தோல்வியை சந்தித்திருந்தாலும் இறுதிவரை அவர்கள் வெற்றிக்காக போராடியது அனைவரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்றுள்ளது. 

Advertisement

இந்நிலையில் இந்த போட்டியில் அடைந்த தோல்வி குறித்து பேசிய நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லேதம் கூறுகையில், “இந்த போட்டியில் மைக்கல் பிரேஸ்வெல் விளையாடிய இந்த இன்னிங்ஸ் ஒரு அற்புதமான இன்னிங்ஸ். ஒரு கட்டத்தில் 131 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்த வேளையில் அவர் வந்து விளையாடிய விதம் மிகச் சிறப்பாக இருந்தது. நமது அணி இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும்போது வெற்றியை நோக்கி அவர் கிட்டத்தட்ட அழைத்து வந்தது மிகச் சிறப்பாக இருந்தது.

இறுதியில் நாங்கள் வெற்றிக்கான கோட்டை எட்ட முடியவில்லை என்றாலும் அவரது இந்த செயல்பாடு சிறப்பான ஒன்று. கிட்டத்தட்ட அவர் ஒரு கட்டத்தில் எங்களுக்கு வெற்றியை அருகில் காண்பித்து விட்டார். மைக்கல் பிரேஸ்வெல் மற்றும் சான்ர்ட்னர் அமைத்த பார்ட்னர்ஷிப் பார்ப்பதற்கு மிக அருமையாக இருந்தது” என பெருமிதத்தோடு கூறியுள்ளார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News