இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் நியூசிலாந்து அணியானது மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் டெஸ்ட் போட்டியானது பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடந்து முடிந்துள்ளது. இந்த போட்டியியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 46 ரன்களிலேயே ஆல் அவுட்டாக, நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 402 ரன்களைக் குவித்தது.

Advertisement

அதன்பின் இரண்டாவது இன்னிங்ஸில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 462 ரன்களை குவித்த நிலையிலும், நியூசிலாந்துக்கு 107 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயிக்க முடிந்தது. பின்னர் நியூசிலாந்து அணியானது எளிதாக இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றியையும் பதிவுசெய்து அசத்தியுள்ளது. இதன்மூலம் நியூசிலாந்து அணி டெஸ்ட் தொடரிலும் 1-0 என்ற கணக்கில் தொடரின் ஆராம்பத்திலேயே முன்னிலையும் வகித்து வருகிறது. 

Advertisement

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான புதுபிக்கப்பட்ட புள்ளிப்பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியைத் தழுவி இருந்தாலும், 68.06 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறது. அதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி 62.50 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், இலங்கை அணி 55.56 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் தொடர்கின்றனர்.

அதேசமயம் இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை வென்றுள்ள நியூசிலாந்து அணியானது 44.44 புள்ளிகளுடன் நான்காம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது. இதுதவிரித்து பாகிஸ்தானுக்கு எதிரான தோல்வியின் காரணமாக இங்கிலாந்து அணி 43.06 புள்ளிகளைப் பெற்று 5ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதுதவிர்த்து தென் ஆப்பிரிக்க அணியானது 38.89 புள்ளிகளுடன் 6ஆம் இடத்தில் உள்ளது. 

 

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

இதுதவிர்த்து வங்கதேச அணியானது 34.38 புள்ளிகளுடன் 7ஆம் இடத்திலும், பாகிஸ்தான் அணி 25.93 புள்ளிகளுடன் 8ஆம் இடத்திலும், வெஸ்ட் இண்டீஸ் அணியானது 18.52 புள்ளிகளுடன் இப்பட்டியலின் கடைசி இடத்தில் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இந்திய அணியானது தொடர்ந்த ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் தற்சமயம் பின்னடைவை சந்தித்துள்ளது ரசிகர்களை கவலையடைய செய்துள்ளது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News