SL vs WI: முதல் ஒருநாள் போட்டியில் இருந்து பதும் நிஷங்கா விலகல்; பின்னடைவை சந்திக்கும் இலங்கை!

Updated: Sun, Oct 20 2024 11:08 IST
Image Source: Google

வெஸ்ட் இண்டீஸ் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகளை உள்ளடக்கிய ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த டி20 தொடரில் இலங்கை அணியானது 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

இந்நிலையில் இலங்கை - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது இன்று முதல் தொடங்கவுள்ளது. அந்தவகையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டியானது இன்று பல்லகலேவில் உள்ள சர்வதேச் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஏற்கெனவே டி20 தொடரை இழந்துள்ள நிலையில் அதற்கு இத்தொடரில் பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்பகிறது.

அதேசமயம் இலங்கை அணியோ டி20 தொடரை வென்றது போல் ஒருநாள் தொடரையும் கைப்பற்ற முனைப்பு காட்டும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில், இப்போட்டி தொடங்கும் முன்னரே இலங்கை அணியானது மிகப்பெரும் பின்னடைவை சந்திள்ளதுள்ளது.

இலங்கை அணியின் அதிரடி தொடக்க வீரரான பதும் நிஷங்கா காயம் காரணமாக வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விளையாடமாட்டார் என இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக அறிமுக வீரர் நிஷன் மதுஷ்கா முதல் ஒருநாள் போட்டியில் விளையாடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இரண்டாவது போட்டியில் பதும் நிஷங்கா விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இலங்கை அணியின் நட்சத்திர தொடக்க வீரரான பதும் நிஷங்கா இலங்கை அணிக்காக இதுவரை 58 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 6 சதங்கள் 16 அரைசதங்கள் என 2,326 ரன்களைச் சேர்த்துள்ளார். அதேசமயம் நிஷன் மதுஷ்கா இலங்கை அணிக்காக இதுவரை 10 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள நிலையில் இன்றைய போட்டியின் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டிலும் அறிமுகமாவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Also Read: Funding To Save Test Cricket

இலங்கை ஒருநாள் அணி: சரித் அசலங்கா (கேப்டன்), அவிஷ்க ஃபெர்னாண்டோ, பதும் நிஷங்கா, குசால் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ், ஜெனித் லியனகே, சதீர சமரவிக்ரம, நிஷான் மதுஷ்கா, துனித் வெல்லாலகே, வனிந்து ஹசரங்க, மஹிஷ் தீக்ஷனா, ஜெஃப்ரி வான்டர்சே, சமிது விக்கிரமசிங்க, அசித்த ஃபெர்னாண்டோ, தில்ஷன் மதுஷங்க, முகமது ஷிராஸ்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை