தொடர் தோல்வி எதிரொலி; வீரர்களுக்கு கடும் கட்டுப்பாட்டை விதித்துள்ள பிசிசிஐ!

Updated: Mon, Oct 28 2024 12:43 IST
Image Source: Google

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நடந்து முடிந்துள்ள முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளின் முடிவில் நியூசிலாந்து அணியானது இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்றதுடன, 2-0 என்ற கணக்கில் இந்தியாவை வீழ்த்தி டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. 

அதிலும் நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்த தோல்வியின் மூலம் தொடரையும் 2-0 என இழந்தது. இதனையடுத்து இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நவம்பர் 01ஆம் தேதி மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தயாராகி வருகின்றனர். 

இந்நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன், இந்திய அணி நிர்வாகம் வீரர்கள் எந்த விதமான தளர்வுகளையும் அளிக்கும் மனநிலையில் இல்லை, எனவே, வீரர்களின் தீபாவளி விடுமுறையையும் அணி நிர்வாகம் ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இந்திய அணி இரண்டு நாள் பயிற்சி போட்டியில் விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியது. 

அதன்படி இந்திய அணி வீரர்கள் எதிர்வரும் அக்டோபர் 30 மற்றும் 31 தேதிகளில் பயிற்சியில் ஈடுபடும் என கூறப்படுகிறது. இதன் காரணமாக வீரர்கள் அனைவரும் நாளைய தினம் மும்பை வரவேண்டும் என்றும் பிசிசிஐ தரப்பில் இருந்து உத்திரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த பயிற்சியில் எந்தவொரு வீரருக்கு விடுப்போ அல்லது ஓய்வோ கிடையாது என்பதையும் பிசிசிஐ திட்டவட்டமாக அறிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 

 

ஏனெனில் ஏற்கெனவே தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியைத் தழுவியதுடன் தொடரையும் இழந்துள்ள இந்திய அணி, மூன்றாவது போட்டியில் வெற்றிபெற்று ஒயிட்வாஷை தவிர்க்க வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறவும் இந்த வெற்றி இந்திய அணிக்கு அவசியம் என்பதாலும் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  

Also Read: Funding To Save Test Cricket

இந்திய டெஸ்ட் அணி: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், விராட் கோலி, ரிஷப் பந்த், சர்ஃப்ராஸ் கான், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ரவிச்சந்திரன் அஷ்வின், ஆகாஷ் தீப், அக்ஷர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, துருவ் ஜூரல், கேஎல் ராகுல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை